GST Reforms : ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது
மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தபடி, சரக்கு மற்றும் சேவை வரி (GST) மறுசீரமைப்பு நாடு முழுவதும் இன்று முதல் (GST Reforms) அமலுக்கு வந்துள்ளது. கடந்த செப்டம்பர் 3-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் 12 மற்றும் 28 சதவீத ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக 5 மற்றும் 18 சதவீத புதிய ஜிஎஸ்டி வரி மட்டும் இருக்கும் என்று அக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. இந்த மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஜிஎஸ்டி வரியால் சுமார் 375 பொருட்களின் மீதான விலை கணிசமாக குறையும் என மத்திய தெரிவித்தது. மேலும் இந்த புதிய ஜிஎஸ்டி வரியினால் எந்தெந்த பொருட்களின் விலை குறையும்? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
18% இருந்து 5% ஆக குறைக்கப்பட்ட பொருட்கள்
சாக்லேட், குளிர் பானம், காபி பவுடர், ஓட்ஸ், ஐஸ் க்ரீம், கார்ன் பிளேக்ஸ், குளியல் சோப்பு, ஷாம்பூ, டூத் பேஸ்ட், டூத் பிரஷ், விக்ஸ், டால்கம் பவுடர், அமிர்தாஞ்சன், ஷேவிங் க்ரீம், ஷேவிங் ப்ளேடு, ஷேவிங் லோஷன் ஆகிய பொருட்களின் ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
12% இருந்து 5% ஆக குறைக்கப்பட்ட பொருட்கள்
நெய், வெண்ணை, சீஸ், பன்னீர், பிஸ்கட், மயோனைஸ், பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள், நொறுக்கு தீனிகள், நூடுல்ஸ், பாஸ்தா, கார்பனேட் செய்யப்பட்ட ஜூஸ் வகைகள், தக்காளி சாஸ், சோயா சாஸ், மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் டயாப்பர் ஆகிய பொருட்களின் ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டு உபயோக (GST Reforms) பொருட்களான சைக்கிள், மேசை, காஸ் அடுப்பு, குக்கர், கண்ணாடி, தட்டு, டம்ளர், கரண்டிகள், கிண்ணங்கள், கத்தி ஆகிய பொருட்களின் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
கட்டுமான பொருட்கள் (GST Reforms)
சிமெண்ட் 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கட்டுமானத்திற்கு பயன்படும் கம்பிகளின் ஜிஎஸ்டி ஏற்கனவே 18 சதவீதம் இருப்பதால் அதன் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல் வீட்டு உபயோக பொருட்களான 32 இன்ச் டிவி, ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகிய பொருட்களின் ஜிஎஸ்டி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மதுபானங்கள், சொகுசு கார்கள், சிகரெட், புகையிலை ஆகிய பொருட்களின் ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!