GST Slabs To Changes Approved By Cabinet : ஜிஎஸ்டி வரி விகிதங்களை 2 அடுக்குகளாக மாற்ற அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது
நடப்பில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரியின் (Goods and Services Tax) சில அடுக்குகளை நீக்க பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் இந்த பரிந்துரையை மாநில அமைச்சர்கள் குழு ஏற்றுக்கொண்டது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டெல்லியில் 79 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசாக சரக்கு மற்றும் சேவை வரி கணிசமாக குறைக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி வரி விகித முறையை ஏற்றுக்கொள்ள அமைச்சர்கள் குழு (GST Slabs To Changes Approved By Cabinet) ஒப்புதல் அளித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு சீர்திருத்தங்கள்
நாடு முழுவதும் கடந்த 1 ஜூலை 2017-ம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வாரியானது 0%, 5%, 12%, 18%, 28% என 5 அடுக்குகளாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் மத்திய அரசு தற்போது 12 சதவீதம் மற்றும் 28 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி அடுக்குகளை நீக்கிவிட்டு, இதற்கு பதிலாக 5% மற்றும் 18% ஜிஎஸ்டி வரி விகிதங்களை வைத்திருக்க முடிவு செய்துள்ளது. மேலும் 28 சதவீதம் வரி அடுக்கில் உள்ள 90 சதவீதம் பொருட்களுக்கான வரியை 18 சதவீதமாகவும், 28 சதவீதம் வரி அடுக்கில் உள்ள பொருட்ககளை 5 சதவீத அடுக்கிற்கு மாற்றவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பொருட்களின் விலையானது குறைந்து பொது மக்களுக்கு நிதி சுமையிலிருந்து விடுதலை கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
40 சதவீத ஜிஎஸ்டி வரி அறிமுகம் (GST Slabs To Changes Approved By Cabinet)
பான் மசாலா, புகையிலை (பாவப் பொருட்கள்) மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கு புதிதாக 40% ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த முன்மொழிவை பரிசீலினை செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் அக்டோபரில் நடைபெற வாய்ப்புள்ளது. மேலும் இந்த புதிய நடைமுறையால் சரக்கு மற்றும் சேவை வரியின் வசூலில் பெரிய அளவில் எதிர்மறை விளைவு ஏற்படும் என அரசு தெரிவித்துள்ளன.
பல்வேறு துறைகளுக்கு பயனளிக்கும்
இந்த ஜிஎஸ்டி வரி விகிதங்களை இரண்டு அடுக்குகளாக மாற்றும் நடவடிக்கையால் நாட்டின் முதுகெலும்பான விவசாயம், போக்குவரத்து துறை, சுகாதாரத்துறை, கட்டுமானம், ஆட்டோமொபைல், ஜவுளி துறை, உரங்கள், கைவினைப்பொருட்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, காப்பீடு போன்ற முக்கிய பொருளாதார துறைகள் பெரிய அளவில் நன்மையடையும் என ஜிஎஸ்டி கவுன்சில் தெரிவித்துள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!