Gistak Media

Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!

ஒரே பட்டாம்பூச்சியில் பாதி ஆண் – பாதி பெண் பட்டாம்பூச்சி Gynandromorph Butterfly என்பது மிகவும் அற்புதமான காட்சி மற்றும் இயற்கையின் மிக அரிய உயிரியல் நிகழ்வுகளில் ஒன்று ஆகும். பொதுவாக உயிரினங்களில் பாலினத்தை தீர்மானிப்பது Chromosome என்ற அமைப்பாகும். உயிரின உடல்களில் Chromosome தவறாக பிரியும்போது இப்படி உருவாகிறது.

நம்மை ஆச்சரியப்படுத்தும் ஓர் இயற்கை நிகழ்வு

இவ்வகை பட்டாம்பூச்சிகளின் உடலமைப்பு ஆனது ஒரு பக்கம் Male chromosomes மற்றும் மற்றொரு பக்கம் Female chromosomes என இரு பாலினங்களின் கலவையாக இருக்கும். உடலின் ஒரு பக்கம் ஆண் பண்புகளையும் மற்றும் மற்றொரு பக்கம் பெண் பண்புகளையும் காட்டும்.​ உடலின் ஒரு பக்கம் bright நிறமாகவும் மற்றும் மற்றொரு பக்கம் dull நிறமாகவும் வேறுபடும். மேலும் உடல் வடிவமும் வேறுபடும். இவை பொதுவாக மலைப்பாங்கான புல்வெளிகளில் வாழ்கின்றன. தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் (நீலகிரி, முதுமலை) காணப்படுகின்றன.

இவ்வகை பட்டாம்பூச்சிகளில் இனப்பெருக்கம் சாத்தியமில்லை

இவை இனப்பெருக்க உறுப்புகள் பெற்றிருந்தாலும், இனப்பெருக்கம் சாத்தியமில்லை.​ இவற்றின் ஆண் பக்கத்தின் இன உறுப்பு (genitalia) மற்றும் பெண் பக்கத்தின் முட்டை-குழாய்கள் (ovaries) செயல்படாது. ஆண்-பெண் உறுப்புகள் கலவையாக (Gynandromorph Butterfly) இருந்தாலும், அவை சரியாக வளர்ச்சியடையாத நிலையில் இருப்பதால் இனப்பெருக்க திறன் இல்லாமல் இருக்கும். மேலும் ஆண்-பெண் உறுப்புகள் கலவையாக இருப்பதால் துணைதேடுதலில் குழப்பம் ஏற்படும். அது  சரியான துணையை ஈர்க்க முடியாமல் போகும்.

Gynandromorph Butterfly - Gistakmedia

இவ்வகை பட்டாம்பூச்சிகளின் வாழ்க்கைக்காலம் (Gynandromorph Butterfly)

இவ்வகை பட்டாம்பூச்சிகளின் வாழ்க்கைக்காலம் சாதாரண பட்டாம்பூச்சிகளுக்கு சமமாகவோ அல்லது சற்று குறைவாகவோ இருக்கும். இரு பாலின உறுப்புகளை பராமரிக்க அதிக ஆற்றல் தேவைப்படுவதால் மற்றும் அதிகம் ஆற்றல் செலவழிப்பு இருப்பதால் நீண்ட கால வாழ்க்கை (Gynandromorph Butterfly) என்பது குறைவு ஆகும். இவ்வகை பட்டாம்பூச்சிகள்  விரைவாக இறக்கும். சராசரியாக இவ்வகை பட்டாம்பூச்சிகள் 1-7 நாட்கள் மட்டும் உயிர்வாழும்.​

ஜெனெடிக்ஸ் மற்றும் வளர்ச்சி உயிரியல் ஆய்வில் இவற்றின் பங்கு

ஜெனெடிக்ஸ் மற்றும் வளர்ச்சி உயிரியல் ஆய்வில் இவ்வகை பட்டாம்பூச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

முக்கியமாக  விஞ்ஞானிகளுக்கு,

  • பாலின உருவாக்கம்
  • chromosome செயல்பாடு
  • gene expression
  • செல் வளர்ச்சி போன்றவற்றை புரிந்துகொள்ள உதவுகின்றன. பல்கலைக்கழகங்கள் ஜெனெடிக் ஆய்வுகளில் இவற்றை பயன்படுத்துகின்றன. மருத்துவ அறிவியலுக்கும் இவை உதவுகின்றன.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top