H3N2 Virus : இந்தியாவில் பரவும் புதிய வகை வைரஸ்.. ஐசிஎம்ஆர் எச்சரிக்கை
இந்தியாவில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக ஐசிஎம்ஆர் The Indian Council of Medical Research (ICMR)) எச்சரிக்கை (H3N2 Virus) விடுத்துள்ளது. கடந்த இரண்டு வாரமாக மும்பை, டெல்லி, கான்பூரில் H3N2 வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுவதாகவும், டெல்லியில் மட்டும் 11 ஆயிரம் வீடுகளில் எடுக்கப்பட்ட தரவுகளில் சுமார் 69 சதவீத வீடுகளில் குறைந்த பட்சம் ஒருவருக்கு இவ்வகை காய்ச்சல் இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. மேலும் இது கொரோனா வைரஸ் போல அதிதீவிரமாக இருக்காது என்றபோதிலும், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது. மேலும் குழந்தைகள், இதய நோய் சம்மந்தமான பிரச்சனை உள்ளவர்கள், ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுவாச வைரஸ் தொற்று
இது தொடர்பாக மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கையில், ”இது ஒரு சுவாச வைரஸ் தொற்று” ஆகும். மேலும் இது முக்கியமாக 15 வயதுக்குட்பட்டவர்களையும் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களையும் பாதிக்கிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைகிறது. மேலும், H3N2 வைரஸ் காய்ச்சல் எளிதில் தொற்றக்கூடியது, மேலும் பாதிக்கப்பட்ட நபருக்கு அருகில் உள்ள நபர்களுக்கும் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. இந்த வைரஸ் குறிப்பாக தும்மல், இருமல் அல்லது பேசும்போது வெளிப்படும் சுவாசத் துளிகள் மூலமாக பரவுகிறது. அதேபோல் இந்த வைரஸ் புதியதல்ல. பழைய வைரஸின் ஒரு சிறப்பு வகையே இப்போது வேகமாக பரவி வருகிறது.
வானிலை மாறும்போது பரவும் (H3N2 Virus)
இந்த வைரஸ் வானிலை நிகழ்வு மாறும்போது பரவுகிறது. பொதுவாக, இதன் அறிகுறிகள் வயிற்று வலி, தொண்டை வலி, தலைவலி, அதிக காய்ச்சல், சளி, தசை, உடல் வலி, உடல் சோர்வு மற்றும் குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவையாகும். மேலும் ஒரு சிலருக்கு சுவாசிப்பதில் சிரமம் மற்றும் அதிக காய்ச்சல் இருக்கும் (H3N2 Virus) என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. அதேபோல் பெரும்பாலான நேரங்களில், இந்த வைரஸ் தானாகவே குணமடைகிறது, இருப்பினும் 3 முதல் 5 நாட்களில் குணமடைவார்கள் எனத் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!