Gistak Media – Cinema News | Trending News | Latest News

Hair Thin Fiber Chip : மனித முடியை விட மெல்லிய ‘கணினி சிப்’.. சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.!

உலக அறிவியல் சமூகத்தை வியப்பில் ஆழ்த்தும் விதத்தில் சீன விஞ்ஞானிகள் மனித முடியை விட மெல்லிய கணினி சிப் (Hair Thin Fiber Chip) ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது Nature இதழின் ஜனவரி 2026 பதிப்பில் வெளியாகியுள்ள புதிய கண்டுபிடிப்பு ஆகும். இந்த தொழில்நுட்ப சாதனை மனித வாழ்க்கையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நன்றாக உதவும் சாதனை ஆகும்.

மனித முடியை விட மெல்லிய நூலில் இயங்கும் கணினி சிப்

இந்த கணினி சிப் (Fiber Chip), Fudan University-வைச் சேர்ந்த சீன விஞ்ஞானிகளால்  (ஆராய்ச்சியாளர்களால்) உருவாக்கப்பட்டது. சீனாவின் ஃபுடான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள இந்த சிப், 1 மீட்டர் நீளமுள்ள நூலில் 1 கோடி டிரான்சிஸ்டர்களை கொண்டுள்ளது. இந்த சிப் ஆனது 1990-களில் பயன்படுத்தப்பட்ட பென்டியம் III கணினி பிரௌஸர்களுக்கு இணையான வேகம் கொண்ட சிப் ஆகும்.

FIC மற்றும் MSA அடிப்படையில் உருவாக்கப்பட்ட சிப் (Hair Thin Fiber Chip)

இது Fiber Integrated Circuit (FIC) மற்றும் Multi Layered Spiral Architecture (MSA) அடிப்படையில் உருவாக்கப்பட்ட சிப் ஆகும். மனித தலைமுடியை விட மெல்லிய நார் போன்ற இந்த சிப்பில் (Diameter சுமார் 50-100 மைக்ரான்கள்) மின்சுற்றுகள், டிரான்சிஸ்டர்கள் மற்றும் கம்ப்யூட்டிங் அலகுகள் இணைக்கப்பட்டுள்ளன. இது ஜப்பானிய சுஷி ரோல் (Hair Thin Fiber Chip) தயாரிப்பு முறையில் பல அடுக்கு (Layers) செமிகண்டக்டர் பொருட்கள் (Semiconductors), உலோக வயர்கள் (Metal Wires), மற்றும் பாலிமர் (Elastic Polymer) ஆகியவற்றை சுருட்டி (Rolled Spirally) ஒரே நாராக உருவாக்கப்பட்டுள்ளது. 10,000 முறை வளைத்தாலும் பழுதடையாத சிறந்த நெகிப்புத்தன்மை கொண்ட இந்த சிப்பின் விட்டம் வெறும் 50 மைக்ரோ மீட்டர் மட்டுமே ஆகும். இந்த சிப் ஆனது 15 டன் வரை எடை தாங்கும் திறன் கொண்டது.

3D Printing மற்றும் Fiber Optics தொழில்நுட்பங்களை இணைக்கும் சிப்

இந்த கணினி சிப்கள் (Fiber Chips) கம்ப்யூட்டிங் செய்யவும், டிஸ்பிளே செய்யவும், மற்றும் சென்சர்களாக செயல்படவும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 3D Printing மற்றும் Fiber Optics தொழில்நுட்பங்களை இணைக்கும். Polymer Electronics மற்றும் Novel Fabrication Techniques-களை சீன விஞ்ஞானிகள் பயன்படுத்தி, Processing, Memory, மற்றும் Signal Functions-ஐ ஒரே நாரில் இணைத்துள்ளனர்.

Hair Thin Fiber Chip - Gistakmedia

இந்த சிப்பின் வியத்தகு பயன்பாடுகள்

  • பக்கவாதம், பார்கின்சன் நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் மூளை-கணினி இடைமுகக் கருவிகளில் இந்த சிப் பயன்படுத்தப்படும். எனவே இந்த சிப், பக்கவாதம் போன்ற பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
  • மனித உடலில் (Hair Thin Fiber Chip) பொருத்தப்படும் மருத்துவ உபகரணங்களில் இந்த சிப் பயன்படுத்தப்படும். உடலின் உள்ளே செலுத்தி Health Monitoring செய்ய உதவும்.
  • கணினி, மொபைல் போன்ற இடைமுகக் கருவிகளில் இந்த சிப் பயன்படுத்தப்படும்.
  • பாதுகாப்பு உபகரணங்களில் இந்த சிப் பயன்படுத்தப்படும்.

எதிர்காலத்தில் மனிதர்கள் அணியும் சட்டைகளில் (Shirts) கணினியாக செயல்படும் விதத்தில் இந்த சிப் பயன்படுத்தப்படும். ஸ்மார்ட் ஆடைகள், துணிகளில் இந்த சிப் இணைக்கப்பட்டு உடல் சிக்னல்களை கண்காணிக்கலாம்.

இந்த சிப்பின் எதிர்காலம் குறித்த கணிப்புகள்

  • இந்த சிப் சந்தைக்கு வர இன்னும் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை ஆகலாம்.
  • இந்த சிப்பின் மனித சோதனை இன்னும் ஆரம்ப நிலையிலே உள்ளது.
  • மனித வாழ்க்கையை காப்பாற்றும் (Hair Thin Fiber Chip) இந்த சிப்பிற்கு கட்டுப்பாடுகள் தேவை. ஏனெனில் தேவையான கட்டுப்பாடுகள் இல்லையெனில் இது மனித சுதந்திரத்தையே கேள்விக்குறியாக்கி விடும். மனிதன் தான் தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்தும் நிலை தொடர வேண்டும்.
  • மனித நினைவுகளை சேமிக்கும் சாத்தியம் உள்ளதா என்பதை கண்டறியும்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top