Happy Pongal 2024 : பொங்கல் பண்டிகையின் வரலாறு
தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. இந்த திருநாளில் தாங்கள் விதைத்த நெற்பயிரை அறுவடை செய்து பயன்பெறுவதோடு, தன்னுடன் உழைத்த கால்நடைகளுக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து ஆண்டுதோறும் கொண்டாடி மகிழ்கின்றனர். போகிப் பொங்கல், தை பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என பொங்கல் பண்டிகை நான்கு நாள் (Happy Pongal 2024) திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் திருநாள் என்று சொன்னவுடனே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கரும்பு, ஜல்லிக்கட்டு, பொங்கல் இடுவது என எல்லோருக்கும் தெரியும், ஆனால் இவற்றின் வரலாறு? இவை ஏன் கொண்டாடப்படுகின்றன என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.
போகி பொங்கல்
ஆடி மாதத்தில் விதைத்த நெற்பயிர்களை தை மாதம் 1-ம் தேதி அறுவடை செய்யப்பட்டு தை பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த விளைச்சலை நமக்கு கொடுத்த இந்த இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் (Happy Pongal 2024) பச்சையரிசியுடன் வெள்ளம் சேர்த்து பொங்கலிட்டு மாட்டுக்கும், சூரிய பகவானுக்கும் நன்றி தெரிவிக்கும் பண்டிகைதான் தை பொங்கல். பொங்கல் பண்டிகை வருவதற்கு முன்னதாகவே, வீட்டைச் சுத்தம் செய்தல், சுண்ணாம்பு அடித்தல் என ஊரே திருவிழாக் கோலத்தில் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
தைப்பொங்கல் (Happy Pongal 2024)
பழையன கழிதலும் புதியன புகுதலுமே போகி பண்டிகையாகும். தமிழகத்தில் போகி பொங்கலன்று பரவலாக நம் வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை எரிக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. வீட்டில் உள்ள பொருட்கள் மட்டுமின்றி நம் மனதில் உள்ள தீய எண்ணங்களையும் நீக்கவே இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. சங்க காலத்தில் போகி பொங்கலன்று மக்கள் ஒப்பாரி வைக்கும் பழக்கம் இருந்தது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மாட்டு பொங்கல்
மாட்டு பொங்கல் ‘பட்டி பொங்கல்’ அல்லது ‘கன்று பொங்கல்’ என்றும் அழைக்கப்படுகிறது. தன்னுடன் உழைத்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டு பொங்கல் (Happy Pongal 2024) கொண்டாடப்படுகிறது. மாட்டு பொங்கலன்று கால்நடைகளையும், மாட்டுத் தொழுவத்தையும் சுத்தம் செய்து மாட்டின் கொம்புகளில் வண்ணம் அடித்து, மாலை அணிவித்து, மஞ்சள், குங்குமம் இட்டு, மாட்டுத் தொழுவத்தில் பொங்கலிட்டு வழிபடுவார்கள். மேலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு) மாட்டு பொங்கல் அன்று கொண்டாடப்படுகிறது.
காணும் பொங்கல்
இந்த காணும் பொங்கலை ‘கன்னிப் பொங்கல்’ என்றும் அழைப்பார்கள். இது பெண்களுக்கான பண்டிகையாகும். பொங்கல் தினத்தன்று ஒருவருக்கொருவர் மாறி மாறி அன்பையும், உணவையும் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த காணும் பொங்கலன்று ஒவ்வொரு ஊரிலும் கோல் அடித்தல், பானை உடைத்தல், சறுக்கு மரம் ஏறுதல், கபடி போன்ற தமிழர்களின் பாரம்பரிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த பொங்கல் பண்டிகையில் 4 நாட்களும் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதேபோல் இந்த 2024 வருடமும் பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!