HARMFUL ALGAL BLOOMS (HABS):மனிதனை கொள்ளும் இருகலப் பாசிகள்
பொதுவாக நீர்நிலைகளான கடலில், குலங்களில், ஆற்றுப்படுக்கைகளில் பாசிகள் படர்ந்திருக்கும் அவை பார்ப்பதற்கு பச்சைப் பசேலென்று அழகாக காட்சி அளித்தாலும் அவற்றின் மேல் கால் வைத்தால் அப்படியே வழுக்கி விடும் அந்த அளவிற்கு மென்மையாக இருக்கும். நீரின் தன்மையை வைத்து அதற்கேற்ப பாசிகள் நீருக்கு அடியிலும், நீரின் மேற்பகுதியில் மிதந்தும் வளரும். சில பாசிகள் நன்மை செய்தாலும், சில வகையான பாசிகள் உயிரை பறிக்கக் கூடியவையாகவும் இருக்கின்றது.
உயிரை பறிக்கும் பாசிகள்!
HARMFUL ALGAL BLOOMS (HABS): இந்தியாவில் பாசிகளை பற்றிய ஆராய்ச்சியை சென்னையை சேர்ந்த எம்.ஓ.பி. பார்த்தசாரதி ஐயங்கார் தான் முதன் முதலில் தொடங்கினார். இவர் இந்திய பாசியியல் துறையின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார். பாசிகளைப் பற்றிய ஆராய்ச்சியை தொடங்கியப் பின் எக்பல்லோசிஸ்டாப்ஸிஸ், ஃபிரிட்சியல்லா, கேராசைஃபான், சிலிண்ட்சோகேப்சோப்சிஸ் ஆகிய புதிய பாசி இனங்களை கண்டுபிடித்துள்ளார். இவர் வால்வகேல்ஸ் என்ற கட்டுரை ஒன்றையும் எழுதியுள்ளார். இவர் எல்லா வகையான பாசிகளின் ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தாலும், இருக்கலப் பாசிகளின் ஆராய்ச்சிதான் இவரைப் பேச வைத்தது. இவரை தொடர்ந்து டி.வி.தேசிகாச்சாரி, என்.டி.காமத், மகாராஷ்டிராவைச் சேர்ந்த பி.டி.சரோட், குஜராத்தைச் சேர்ந்த எச்.பி.காந்தி போன்றோர் இந்தியாவில் காணப்படும் இருகலப் பாசிகள் பற்றிய ஆராய்ச்சியை தொடர்ந்தார்கள்.
இருகலப் பாசிகள் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள்:
ஒரு மனிதனின் உயிரை பறிக்கக் கூடியதுதான் இருகல பாசிகள் என்று சொல்லப் படுகிறது. இருகலப் பாசிகள் நிறைந்து இருக்கின்ற ஆற்றிலோ அல்லது கடலிலோ எதிர்பாராத விதமாக மனிதன் ஒருவன் மாட்டிக்கொண்டால் அந்த மனிதனின் மூச்சுக்குழாய் வழியாக அப்பாசிகள் அவனது நுரையீரலுக்குள் புகுந்து அங்குள்ள காற்றுப்பைகளை வெடிக்க வைப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமின்றி இந்த பாசிகள் இரத்தத்தில் கலந்து பல்வேறு திசுக்களை அழித்து அம்மனிதனின் உடலையே செயலிழக்க செய்துவிடுகிறது என்றும் சொல்லப்படுகிறது. அதே சமயம், மற்றொரு ஆய்வு இறந்த மனித உடலை இருகலப் பாசிகள் நிறைந்து இருக்கும் கடலில் வீசினால், அப்பாசிகள் அந்த உடலில் படிவதில்லை எனவும் குறிப்பிடுகின்றன.
ஆய்வுகளின் முடிவு:
பாசிகள் நிறைந்துள்ள கடலுக்குள் உயிருடன் சென்று மாட்டிக் கொண்டு இறந்த மனிதனின் உடலை உடற்கூறாய்வு செய்து பார்த்ததில் அவனுடைய எலும்புகளின் மட்ஜையில் இருகலப் பாசிகள் படிந்து இருப்பதையும், அதே சமயம் உயிரற்ற உடலை தூக்கி எறிந்து அந்த உடலை பரிசோதித்து உடற்கூறாய்வு செய்துப் பார்த்ததில் அந்த உடலில் இருகலப் பாசிகள் படிந்திருக்க வில்லை என்றும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியின் மூலம் மனித உயிர்களுக்கு ஆபத்தாக இருக்கும் பாசிகளை பற்றின விவரங்களை அறிந்துகொள்ள முடிகிறது.








