HCL Founder Shiv Nadar : இந்தியாவின் சிறந்த தொழில் முனைவோர் & 3வது பெரிய பணக்காரர் Shiv Nadar
Shiv Nadar தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து, படித்து வட இந்தியாவில் பிஸ்னஸ் செய்து சாதித்த மாபெரும் தமிழ் தொழிலதிபர். தற்போது 60 நாடுகளில் பிஸ்னஸ் செய்து வருகிறார். வாழ்க்கையில் பிடிப்பும், விடாமுயற்சியும் இருந்தால் எதையும் சாத்திக்க முடியும் என்பதற்கு இவர் ஓர் முக்கியமான உதாரணம். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இவர் கோயம்புத்தூரில் உள்ள PSG College Of Technology-யில் இஞ்சினியரிங் பட்டப்படிப்பை முடித்தவர்.
HCL Founder Shiv Nadar - தொழில் பயணம் :
வால்சந்த் குரூப்பில் 1967 ஆம் ஆண்டில் ஷிவ் நாடார் முதன் முதலில் வேலைக்குச் சேர்ந்தார். ஷிவ் நாடார் 1976 ஆம் ஆண்டில் HCL நிறுவனத்தை (HCL Founder Shiv Nadar) ரூ.1,87,000 முதலீட்டில் தொடங்கினார். தனது வீட்டு கேராஜில் ஷிவ் நாடார் தனது ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து HCL நிறுவனத்தை தொடங்கினார். ஷிவ் நாடார் ஆரம்பித்த HCL நிறுவனம் தொடக்கத்தில் கால்குலேட்டர்கள் மற்றும் மைக்ரோ பிராசஸர்களை மட்டுமே தயாரித்தது. அதன் பின்னர் HCL நிறுவனம் ஆனது இந்திய நாட்டின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்தது. HCL நிறுவனத்தின் தற்போதைய ஆண்டு வருவாய் 11.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அவர் HCL நிறுவனத்தை 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வகித்து வந்தார். மத்திய அரசு 2008 ஆம் ஆண்டில் ஷிவ் நாடார் IT துறையில் ஆற்றிய பங்கைப் பாராட்டும் விதமாக அவருக்கு பத்ம பூஷண் விருதை வழங்கி கௌரவித்தது.
பின்னர் அவர் நிறுவனத்தின் தலைவர் என்ற பொறுப்பை தனது மகள் ரோஷணி நாடாருக்கு விட்டுக் கொடுத்தார். ரோஷிணி நாடார் இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரப் பெண்மணிகளில் ஒருவர் ஆவார். இவரது நிர்வாகத்தில் இப்போது இந்த நிறுவனம் 60 நாடுகளுக்கும் மேல் கிளை விரித்து 2,22,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது. ரோஷிணி நாடாரின் சொத்து மதிப்பு ரூ.84,330 கோடி ஆகும்.
சமூக தொண்டில் ஆர்வம் :
நாட்டின் மிகப்பெரிய நன்கொடையாளர்களில் ஒருவராக ஷிவ் நாடார் (HCL Founder Shiv Nadar) உள்ளார். இந்தியாவின் பெரும் தொழிலதிபராக இருப்பது மட்டும் அல்லாமல் அவர் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஷிவ் நாடார் பவுண்டேனுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். ஷிவ் நாடார் இதுவரை ஒரு நாளைக்கு ரூ.3 கோடி என்ற கணக்கில் ரூ.1161 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகவும் தாராளமான மனிதர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். டெல்லியின் டாப் பணக்காரரும் நாட்டின் மூன்றாவது பெரிய பணக்காரரும் ஆன ஷிவ் நாடாரின் நிகர சொத்து மதிப்பு போர்ப்ஸ் கணிப்பின்படி ரூ.2,43,746.70 கோடி ஆகும். தற்போது HCL நிறுவனம் வெற்றிகரமாக செயல்படுவதற்குக் காரணம் ஷிவ் நாடாரின் கடுமையான உழைப்பும் மற்றும் அவரது மகள் ரோஷணி நாடாரின் நிர்வாக திறமையும் ஆகும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!