மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய அரசின் எல்லை பாதுகாப்பு படையில் 233 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது வெளியாகி உள்ளது. பாதுகாப்புத் துறையில் பணியாற்ற விரும்பும் லட்சியம் உள்ளவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு ஆகும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்த முக்கிய தகவல்கள்
Head Constable Jobs 2026: காலிப்பணியிடங்களின் விவரங்கள்
- தலைமைக் காவலர் பணி (Steward) – 02
- தலைமைக் காவலர் பணி (Communication)) – 197
- தலைமைக் காவலர் பணி (மின்பணியாளர்) – 29
- தலைமைக் காவலர் பணி (கால்நடை மருத்துவம்) – 05 என மொத்தமாக 233 காலியிடங்கள் உள்ளன.
Head Constable Jobs 2026: கல்வித் தகுதி குறிப்புகள்
- 12 ஆம் வகுப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும்.
- சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பிரிவில் விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும்.
Head Constable Jobs 2026: சம்பள விவரங்கள்
- அடிப்படை சம்பளம் – Rs. 25,500. இந்த அடிப்படை சம்பளம் ஆனது அனுபவத்துடன் Rs. 81,100 வரை உயரும்.
- மொத்த சம்பள விவரம் – DA + HRA + TA உட்பட மாதம் Rs. 35,000 – Rs. 45,000 (இது இடம் மற்றும் அனுபவத்தைப் பொறுத்து முடிவாகும்).
- மத்திய அரசு சலுகைகள் மற்றும் மருத்துவம், ஓய்வூதியம், விடுமுறை, குடும்ப நலன் பலன்கள் உண்டு.
வயது வரம்பு
- 18 – 27 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
- SC/ST/OBC பிரிவினருக்கு அந்தந்த பிரிவினருக்கு ஏற்ற வயது தளர்வுகள் உண்டு.
Head Constable Jobs 2026: தேர்வு செய்யப்படும் முறை
- உடல் தகுதி தேர்வு /ஈர்ப்பு சோதனை (PET/PST),
- பொது அறிவு, கணிதம், மற்றும் தொழில் அறிவு சாரந்த எழுத்துத் தேர்வு
- திறன் சோதனை
- ஆவண சரிபார்ப்பு
- மருத்துவ பரிசோதனை.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப கட்டண விவரங்கள்
- பொதுப்பிரிவினர்/OBC – Rs. 100 கட்டணம் செலுத்த வேண்டும்.
- SC/ST/பெண்கள் – இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
- gov.in அல்லது recruitment.ssb.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பங்கள் மார்ச் 21 முதல் ஏப்ரல் 20, 2026 வரை ஏற்கப்படும்.