Health Benefits Of Moringa Seeds : முருங்கையின் விதைகள் முருங்கைக்காயை விட பல மடங்கு பலன்களை தருகிறது
Health Benefits Of Moringa Seeds :
முருங்கை விதைகள் முருங்கைக்காய் போலவே அதிக சத்துக்கள் நிறைந்தது ஆகும். ஆன்டி-ஆக்ஸிடண்ட், துத்தநாகம், வைட்டமின் A, C, B போன்ற சத்துக்கள் இந்த முருங்கை விதைகளில் உள்ளன. 30 விதமான ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் இந்த முருங்கை விதைகளில் (Health Benefits Of Moringa Seeds) ஒளிந்திருக்கின்றன. குறிப்பாக ஆண்களுக்கு இந்த முருங்கை விதைகள் வரப்பிரசாதமாக திகழ்கின்றது. அதன் காரணமாக ஆண்மை குறைபாடுகளை போக்குவதற்காக தயாரிக்கப்படும் லேகியங்களில் பெரும்பாலும் இந்த முருங்கை விதைகள் மூலப்பொருட்களாக சேர்க்கப்படுகின்றன. நெய்யில் முருங்கை விதைகளை வறுத்துப் பொடி செய்து பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருகும். நரம்புகள் ஆனது வலுப்பெறும். பாலுடன் முருங்கை விதைகளை சேர்த்து காய்ச்சிக் குடித்தால் தண்ணீர் போன்ற விந்து ஆனது கெட்டிப்படும். விந்து ஆனது கெட்டிப்படுவதுடன் மட்டுமல்லாமல் விந்தணுக்களின் எண்ணிக்கை ஆனது அதிகரிக்கும். மேலும் நரம்புகளும் நல்ல வலுப்பெறும்.
முருங்கையின் விதைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து, பவுடராக அரைத்து மற்றும் சலித்து எடுத்து கொண்டு பசும்பாலில் இரவு 21 நாட்கள் இந்த பவுடரை கலந்து குடித்து வந்தால், ஆண்களுக்கு நல்ல விந்தணு நலன் கிடைக்கும் (ஆனால், இந்த ஆலோசனையை மருத்துவர்களை கலந்து ஆலோசித்து அவர்களின் முறையான வழிகாட்டுதலின்படி எடுத்து கொள்ள வேண்டும்). இந்த முருங்கை விதைகள் ஆனது அனிமிக் பிரச்சனை உள்ளவர்களுக்கு பேருதவி புரிகிறது. பெண்கள் அதிக அளவில் ரத்தசோகை நோயால் பாதிக்கப்படுவதால் இந்த பவுடரை பெண்கள் உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு மண்டலம் குறிப்பாக 48 நாட்கள் பெண்கள் முருங்கை விதை பவுடரை பாலில் கலந்து குடித்து வந்தால், சோகை பிரச்சனை (Health Benefits Of Moringa Seeds) ஆனது நீங்கிவிடும்.
நீரிழிவு (சர்க்கரை) நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை ஒழுங்குப்படுத்தி, சீராக பராமரிக்க உதவுகிறது. முருங்கையின் விதைகளில் அதிக அளவில் உள்ள ஜிங்க் ஆனது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்குப்படுத்தும். நீரிழிவு நோயாளிகள் இந்த பொடியில் சூப் செய்து சாப்பிடலாம். முருங்கை விதை இதயத்தை சுற்றி படிந்துள்ள கொழுப்புகளை அகற்றுவதில் சிறப்பாக செயல்படுகிறது. இது இதயத்தை நல்ல முறையில் காக்கும். வயதானவர்களுக்கு கால்சியம் குறைபாடு காரணமாக எலும்பு தேய்மானமும் மூட்டு வலி, முழங்கால் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த முருங்கை விதையானது வயதானவர்களின் கால்சியம் பிரச்சனையையும் தீர்க்கிறது. பாலில் ஒரு ஸ்பூன் இந்த முருங்கை விதை பவுடரை சேர்த்து கொதிக்க வைத்து, நாட்டுச்சர்க்கரை கலந்து குடிக்கலாம். அல்லது காபி, டீ தூள் போல பயன்படுத்தலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் (Health Benefits Of Moringa Seeds) இந்த பவுடரை, கூட்டு, சூப், ரசம் என ஏதாவது ஒரு விதத்தில் சேர்த்து கொள்வது நல்லது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!