Gistak Media – Cinema News | Trending News | Latest News

ஆரோக்கியமாக வாழ்வதற்கான உணவு முறைகள் | Healthy Food Habits for Living

நாம் வாழும் இன்றைய அவசர உலகில் நம் வேலைகள் அனைத்தும் அவசரமாகவே இருக்கிறது. காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் முன் வரையிலும் நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அவசர அவசரமாகவே செய்யும்படிக்கு ஆளாகியுள்ளோம். நம் பழக்க வழக்கங்களில் ஆரம்பித்து நாம் உண்ணும் உணவுமுறைகளும் முழுமையாக மாறியுள்ளது. இப்பெரும் மாற்றத்தினால்  வாழ்வில் மட்டும் இன்றி உடல் இயக்கங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டு பெயர் தெரியாத புதிய வகை நோய்களும் மனித உடலை ஆக்கிரமிக்கிறது. இந்த நிலையை சரிசெய்ய நாம் நம்மை காத்துக்கொள்ள அன்றாடம் நமக்கான நேரத்தை செலவிட்டு உணவு முறைகளை சீர்படுத்தி ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

Healthy Food Habits - Platform Tamil

Healthy Food Habits – அதிகாலை எழுந்தவுடன் டி மற்றும் காபி குடிப்பதைத் தவிர்த்து உடற்பயிற்சி (அல்லது) யோகாசனம் போன்றவைகளை செய்வது நல்லது. வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது இன்னும் சிறந்தது. காலை உணவுகளில் கார்போ ஹைட்ரேட்களை தவிர்ப்பது நல்லது (சாப்பாடு, இட்லி, தோசை) போன்றவைகள்….இதற்கு பதிலாக பழச்சாறுகள் (juice), உலர் பழங்கள்(dry fruits), பழங்கள்(fruits), வேகவைத்த (அல்லது) முளை கட்டிய பயறுவகைகள்(கம்பு, பச்சைப்பயிறு, சிவப்பு கொண்டக்கடலை, கொள்ளு) இவைகளை உட்கொள்வது சிறந்தது. இவ்வகையான உணவுகளை உட்கொள்ளும்போது அன்றைய  நாள் மிகவும் புத்துணர்வோடு இருப்பதை நாம் உணரலாம்.

மதிய உணவுகளில் புரதம், நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் போன்றவைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். கீரைகள், காய்கறிகள், பருப்பு வகைகள் இவைகளை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. தினமும் ஒரு வகை கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது. அசைவ உணவாகிய  இறைச்சிகளை உட்கொள்வதை விட மீன் வகைகளை உட்கொள்வது நல்லது. இவை தைராய்டு பிரச்சனைகளை சரிசெய்கிறது. தினமும் ஒரு பழ வகையை உட்கொள்வது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ,பி ,பி2,பி5 சத்துக்கள் நிறைந்துள்ளது. நாம் உண்ணும் உணவின் அளவு நமக்கேற்றார் போல் இருக்க வேண்டும் அப்படி இல்லையென்றால் செரிமான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

Healthy Food Habits - Platform Tamil

உணவுகளை மூன்று வேலையாக உண்பதை விட நான்கு வேலையாகவும் உண்ணலாம். ஆனால் அவ்வாறு உண்ணும் உணவின் அளவானது குறைவாக இருக்க வேண்டும். இப்படி அளவை குறைத்து உண்ணும்போது செரிமான பிரச்சனை ஏதும் இல்லாமல் உடல் ஆரோக்கியமாகவும், பருமன் இன்றியும் இருக்கும். 

இரவு நேர உணவுகளில் கலோரிகள் குறைவான சத்தான எளிய உணவுகளையே உட்கொள்ள வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. காரமான உணவுகளை தவிர்ப்பதும் நல்லது ஏனென்றால் காரத்தில் உள்ள மெட்டோபாலிசம் உடலின் வெப்ப நிலையை அதிகரிக்கச்செய்து நெஞ்செரிச்சலை தூண்டிவிட்டு தூக்கப்பிரச்சனையை  ஏற்படுத்தும். இரவில் சாப்பிடும் உணவு செரிமானப் பிரச்சனை இன்றியும் உடல் எடையை அதிகரிக்காமலும் இருக்க வேண்டும். அந்த வகையில் இட்லி, இடியாப்பம், உப்புமா, தோசை, சாலேட், முட்டை, வாழைப்பழம், போன்றவைகளை உட்கொள்ளலாம். இரவிலும் கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்த்து புரதச்சத்துக்கள் நிறைந்த எளிய உணவுகளை உட்கொள்வது நல்லது. இப்படி மேற்கூறிய வகையில் உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கியமான உடலை கொண்டு ஆரோக்கிய வாழ்வை வாழலாம். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Slideshows

Scroll to Top