பொதுவாக மக்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய ரியல் எஸ்டேட், தங்கம், FD, மற்றும் பங்குச் சந்தை போன்ற திட்டங்களில் ஏதாவது ஒன்றில் முதலீடு (High Return Investment India) செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவை இந்திய முதலீட்டு சூழலில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் நான்கு முதலீட்டு வகைகள் ஆகும். இவற்றில் எந்த முதலீடு எதிர்காலத்தில் அதிக லாபம் தரும் முதலீடு என்பது பல காரணிகளைப் பொறுத்து அமையும். அவற்றில் ரிஸ்க் எடுக்கும் திறன், முதலீட்டு காலம், நிதி இலக்குகள் மற்றும் சந்தை நிலவரம் போன்றவை மிக முக்கிய காரணிகளாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்களுக்கும் இது பொருந்தும்.
ரியல் எஸ்டேட் முதலீடு
ரியல் எஸ்டேட் முதலீட்டில் அதிக மூலதனம் தேவைப்படும். நீண்ட காலத்தில் அதாவது வருடங்கள் கடந்து செல்லும் போது எதிர்காலத்தில் நல்ல வருமானத்தை தரக்கூடிய சிறந்த முதலீடு ரியல் எஸ்டேட் முதலீடு ஆகும். ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பு மற்றும் வாடகை மூலம் நிலையான லாபம் அளிக்கும் முதலீடு ஆகும். நிலையான வளர்ச்சி (Land value and appreciation) மற்றும் மாதாந்திர வாடகை வருமானத்தை (Rental Yield) வழங்கும். RERA (Real Estate Regulatory Authority) வந்தபிறகு ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத்தன்மை அதிகரித்து உள்ளது. சென்னை மற்றும் பெங்களூர் போன்ற பெருநகரங்களில் மெட்ரோ ரயில், ஐடி பார்க்,
கல்வி நிறுவனங்கள் மற்றும் IT வளர்ச்சி போன்ற முக்கிய காரணகங்களால் நிலத்தின் மதிப்பு உயர்ந்துள்ளன. பின் வரும் காலங்களில் 8%–15% CAGR, மற்றும் வாடகை வருமானம் 2%–4% லாப வாய்ப்புகள் உள்ளன. Rs.50 லட்சம் பிளாட் ஆனது 10 ஆண்டுகளில் Rs.1.2 கோடி ஆகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பு நிலையான வளர்ச்சி (Appreciation) மற்றும் மாதாந்திர வாடகை வருமானத்தை (Rental Yield) பெற்று தரும். இந்திய நகர மக்கள் தொகை அதிகரிப்பை தொடர்ந்து ரியல் எஸ்டேட் தேவையும் உயரும். இந்திய ரியல் எஸ்டேட் வளர்ச்சியை International Monetary Fund ஆனது 6%+ என கணித்துள்ளது.
தங்கம் முதலீடு (High Return Investment India)
ஒரு நாட்டில் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்படும் காலங்களில் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. ஆனால் அதிக விலை உயர்வு மற்றும் சேமிப்பு செலவுகள் ஏற்படுகின்றன. தங்கம் 2025 ஆண்டில் 80% உயர்ந்தாலும், நீண்ட காலத்தில் தங்கம் ஆனது 8-10% சராசரி உயர்வு பெறும். இந்தியர்களின் விருப்பமான முதலீடான தங்கம் ஆனது மிதமான ரிஸ்க் (High Return Investment India) கொண்டுள்ளது. பிளாக் மார்க்கெட், SEBI ஒழுங்குமுறையற்ற தன்மை, ஸ்டோரேஜ்/திருட்டு, மற்றும் இம்போர்ட் டூட்டி மாற்றங்கள் போன்ற பாதிப்புகள் உள்ளன.
FD (ஃபிக்ஸ்ட் டெபாசிட்) முதலீடு
FD முதலீடு மூலதனம் பாதுகாப்பு மற்றும் உறுதி செய்யப்பட்ட நிலையான வருமானத்தை தரும். குறைந்த ரிஸ்க் கொண்டுள்ளது. வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும். SBI போன்ற வங்கிகள் 6%–7.5% வட்டி விகிதம் வழங்குகின்றன.FD 6-7.5% நிலையானது, மற்றும் (High Return Investment India) குறைந்த ரிஸ்க். பாதுகாப்பான FD முதலீடு ஆனது குறைந்த அபாயகரமான முதலீடாகவும் செயல்படுகிறது.
பங்குச் சந்தை முதலீடு
எதிர்காலத்தில் பங்குகள் அதிக வருமானத்தை (Returns) தரும், ஆனால் ஏற்ற இறக்கங்கள் அதிகம் உள்ளதால் அதிக ரிஸ்க் உள்ளது. சந்தை நிலவரத்தை பொறுத்த பங்குச் சந்தை (ஈக்விட்டி) மாற்றங்கள் அதிகம் ஏற்படும். பங்குச் சந்தை உயர் ரிஸ்க் (வோலாடைலிட்டி 15-20%) கொண்டுள்ளது. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் Sensex ஆனது 9% -10% சராசரி ஆண்டு (High Return Investment India) ரிட்டர்ன்ஸ்களை அளித்துள்ளது. அதைப்போலவே Nifty ஆனது 10% -12% சராசரியாக உள்ளது. நல்ல நிறுவனப் பங்குகள் (Direct Stocks) அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதின் மூலமாக நீண்ட காலத்தில் (10+ ஆண்டுகளில்) அதிகபட்ச வருமானமாக (10-12% க்கும் மேல்) பெற முடியும்.
ஒரே முதலீடு முழுமையான லாபம் தருவதில்லை
ஒரே முதலீட்டில் முழுமையான முழுமையான லாபம் இல்லை என்பதால் மக்கள் கலவை முதலீடு (Diversification Strategy) முறையில் செயல் படுவது நல்லது.
- 40% பங்குச் சந்தை (நீண்ட காலத்தில்) – Equity (Mutual Funds / Direct Stocks)
- 35% – ரியல் எஸ்டேட் முதலீடு
- 15% – தங்கம் முதலீடு
- 10% – FD முதலீடு
நீண்ட 15–20 ஆண்டு கால கண்ணோட்டத்தில் அதிக லாபம் தரும் முதலீடாக ‘பங்குச் சந்தை’ முன்னிலை வகிக்கிறது.