-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
Honey and Dates Benefits: பேரிச்சம் பழம் தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
உடல் ஆரோக்கியத்திற்கு நாம் நிறைய உத்திகளை கையாளுகிறோம் உணவு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை, தியானம் போன்றவைகள். இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான நன்மைகளை தரக்கூடியது. இந்த அனைத்தையும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் சரியான முறையில் பின்பற்றும்போது, நம் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளைப் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ முடியும். இந்த வாழ்க்கைக்கு அடிப்படையாக இருப்பது உணவு. நிறைய பல நன்மைகளை தரக்கூடிய உணவு பொருட்களை அறிந்து அவற்றை சாப்பிட்டாலே போதும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழமுடியும்.
பழங்கள் சத்துமிக்க உணவு பொருட்களில் ஒன்று இதில் அனைத்து வகையான சத்துக்களும் நிறைந்துள்ளது. ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு வகையான சுவையில் இருக்கும். இனிப்பு சுவையுடன் கூடிய அதிக சத்துக்கள் நிறைந்த பழம் பேரிச்சம் பழம் (Dates). இந்த பழத்துடன் தேன் (Honey) கலந்து சாப்பிட்டால் என்னென்ன பயன்கள் நம் உடலுக்கு ஏற்படும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேன் மற்றும் பேரிச்சம் பழம்(Honey and Dates):
பேரிச்சம் பழம் (Dates) நிறைய சத்துக்களை உள்ளடக்கிய ஆரோக்கியம் தரக்கூடிய பழம். இதை உலர்பழமாகவும் சாப்பிடலாம். இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. புரதம், கால்சியம், பொட்டாசியம், மெக்னிஷியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், செலினியம், காப்பர், துத்தநாகம், சோடியம்,வைட்டமின் ஏ,வைட்டமின் பி, வைட்டமின் பி காம்லஸ், வைட்டமின் கே போன்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதேபோன்று தேனிலும், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், மெக்னிஷியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
தேனில் நிறைந்துள்ள உயர்தரமான ஆன்டிஆக்சிடண்ட் செல்களை சேதப்படுத்தும் ஃபிரீரெடிக்கல்களை வெளியேற்றி உடலை பாதுகாக்கிறது. அதனால் தேனில் பேரிச்சை பழங்களை ஊறவைத்து உட்கொண்டு வருவது மிகச்சிறந்தது. பேரிச்சையை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.
தேன் மற்றும் பேரிச்சம் பழம் நன்மைகள் (Honey and Dates Benefits)
- தேன் மற்றும் பேரிச்சம்பழ (Honey and Dates) கலவையை தினமும் உட்கொண்டு வந்தால் இதில் நிறைந்துள்ள இரும்புச்சத்து, காப்பர் போன்றவை இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து இரத்த உற்பத்தியை மேம்படுத்துகிறது. இரத்த சோகை இருப்பவர்கள் இவ்வாறு பேரிச்சையை எடுத்துக்கொண்டால் இப்பிரச்னையில் இருந்து எளிதில் விடுபட முடியும்.
- பேரிச்சம்பழத்தை (Dates) தேனில் ஊறவைத்து தினமும் எடுத்துக்கொள்ளும் போது இதிலுள்ள இயற்கையான குளுக்கோஸ் பண்புகள், ஊட்டச்சத்துக்கள் தீராத உடற் சோர்வு, அசதியை தடுத்து உடலுக்கு ஆற்றலை தருகிறது.
- முக்கியமாக லோ ஷுகர் எனப்படும். குறைந்த சர்க்கரை அளவு இருப்பவர்களுக்கு இந்த தேன் பேரிச்சம்பழம் (Honey and Dates) கலவை மிகச்சிறந்த உணவு.
- மூளை மற்றும் நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு சிறந்தது பேரிச்சம்பழம் (Dates). பேரிச்சையை தேனுடன் (Honey and Dates) சேர்த்து சாப்பிட்டுவந்தால் மூளை செல்கள் புதுப்பிக்கப்படும், நினைவாற்றல் திறன் அதிகரிக்கும் இதிலுள்ள வைட்டமின் பி காம்லஸ் சத்துக்கள் நரம்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்து நரம்பு பலவீனம், நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்னைகளை தடுக்கும். குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு இதுபோன்று தேன் பேரிச்சம்பழ (Honey and Dates) கலவையை கொடுத்து வந்தால் மூளை, எலும்பு, கண்கள், நரம்பு மண்டலம் பலமடைய உதவும்.
- பேரிச்சம்பழம் மற்றும் தேனில் (Honey and Dates) உள்ள சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடண்ட் குணங்கள், பொட்டாசியம், மெக்னிசியம் போன்ற சத்துக்கள் உடலில் கெட்ட கொழுப்புகள் தேங்குவதை வெளியேற்றி இரத்த குழாய்களை பாதுகாக்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம், படபடப்பு இதயம் பலவீனம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை தடுத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
- தேனில் ஊறிய பேரிச்சம்பழத்தை (Dates) தினமும் சாப்பிட்டு வந்தால் இதில் நிறைந்துள்ள அதிகளவு நார்ச்சத்து இரைப்பை மற்றும் குடல் இயக்கங்களை அதிகரிக்கச் செய்து. மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்துகிறது. முக்கியமாக குடல் புற்றுநோய் வருவதை தடுக்கிறது.
- கருப்பை ஆரோக்கியத்திற்கு சிறந்தது பேரிச்சைபழம் (Dates) மேற்கூறியவாறு தேனில் ஊறவைத்து எடுத்துக்கொண்டு வந்தால் மாதவிடாய் சுழற்சியை சீராக்கவும், கருப்பை பலவீனத்தை குறைத்து கருப்பையை பலப்படுத்தவும் உதவும்.
- கண் பார்வையை அதிகரிக்கும் திறன் பேரிச்சைக்கு உண்டு. இதில் நிறைந்துள்ள வைட்டமின் ஏ சத்தானது மாலை கண்நோய், கண்புரை போன்ற பிரட்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது. அதனால் தேனில் ஊறிய பேரிச்சம்பழத்தை (Dates) தினமும் எடுத்துக்கொண்டு வந்தால்.கண் பார்வை திறன் அதிகரிக்க உதவும்.
- பேரிச்சம்பழம் மற்றும் தேனில் (Honey and Dates) இயற்கையாகவே கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, மெக்னிஷியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை எலும்பு மென்மை,எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுத்து எலும்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
- தேனில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் தொற்றுக்களை குறைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் தேனில் (Honey) ஊறிய பேரிச்சம்பழத்தை (Dates) சாப்பிட்டு வருவது நல்லது. இதன் மூலம் உடலில் இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்கச் செய்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவுகிறது.
- பேரிச்சம்பழத்தை தேனில் (Honey and Dates) ஊறவைத்து சாப்பிட்டு வரும்போது இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள். தலைமுடி பிரச்னைகளை தீர்க்கிறது. தலை முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.
- பெண்கள் கர்ப்ப காலத்தில் இவ்வாறு பேரிச்சம்பழத்தை தேனில் ஊறவைத்து அடிக்கடி உட்கொண்டு வந்தால் தாய் மற்றும் வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை எலும்பு மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இது போன்ற எண்ணற்ற பயன்கள் தேனில் ஊறிய பேரிச்சையில் நிறைந்துள்ளது.








