உலகில் உள்ள பறவை வகைகள் யாவற்றினும் மிகமிகச் சிறிய பறவை வகை ஓசனிச்சிட்டு பறவை ஆகும். இவை 5 செ.மீ நீளமும் மற்றும் 1.8 கிராம் எடையும் மட்டுமே (Humming Bird) கொண்டுள்ளன. இவை 320 இனங்களை கொண்டுள்ளன. ஓசனிச்சிட்டுகளுள் மிகப் பெரியது பேரோசனிச்சிட்டு (பட்டகோன கிகா) ஆகும். இவ்வகை பறவைகள் ஆனது வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் மட்டுமே காணப்படுகின்றன.
ஓசனிச்சிட்டு பெயர் காரணம்
இது ஹம்மிங்பேர்ட்” (Humming Bird) என்றும் அழைக்கப்படுகிறது. இவை வினாடிக்கு 80 முறை இறக்கை அடிக்கின்றன! இதனால் “ஹம்மிங்” (Humming) என்ற ஒலி எழுகிறது. இறக்கைகளை நொடிக்கு 60-80 முறை அடிப்பதால் “உசுஉசு” என்ற ஓசை எழுகிறது. அதனால் இவை ஓசனிச்சிட்டு என்று அழைக்கப்படுகின்றன.
ஓசனிச்சிட்டு பறவை சிறப்பம்சங்கள் (Humming Bird)
- இவை சிறகுகளை வினாடிக்கு 80 முறை அடிப்பதால் “ஹம்மிங்” (Humming) என்ற ஒலி எழுகிறது.
- இவை ஒரு முன்னோக்கி, பின்னோக்கி, செங்குத்தாகவும் மற்றும் ஒரே இடத்தில் நிலவியும் பறக்கும் தனித்துவமான இறக்கை அமைப்பைக் கொண்ட பறவை இனம் ஆகும்.
- இவை பறந்து கொண்டே மலர்களில் உள்ள தேனை உறிஞ்சும் தன்மை கொண்டவை. ஒரே நாளில் அவைகளின் உடல் எடையை விட இருமடங்கு சர்க்கரை உட்கொள்ளும் தன்மை பெற்றிருக்கின்றன. மேலும் இவை பூச்சிகளையும், மற்றும் சிலந்திகளையும் உண்டு வாழ்கின்றன.
- இவைகளின் இதய துடிப்பு வினாடிக்கு 1,260 முறை ஆகும். மிகவும் அமைதியில் வினாடிக்கு 500 முறை ஆகும். இவைகளின் இதயத்துடிப்பு மனிதர்களின் இதயத்துடிப்பை விட 10 மடங்கு அதிகம் ஆகும்.
- இவைகளின் நாக்கு பிளவுடையதாகவும் மற்றும் அதன் மெல்லிய இழைகள் சிறப்பாக தேனை சுழற்றி உறிஞ்சும் திறன் கொண்டதாகவும் உள்ளன. குழல்போல் உருண்டு தேனுண்ன ஏதுவாக இவைகளின் நாக்கு அமைந்துள்ளது.
- இவைகளின் சிறகுகள் 8 எலும்புகளைக் கொண்டு அமையப் பெற்றுள்ளன. இந்த அமைப்பு ஆனது விரிவாக அடிக்கும் கோணத்தில் மாற்றம் செய்து பல திசைகளில் பறக்க இவைகளுக்கு உதவுகின்றன.
உலகின் சிறிதான முட்டையை இடும் விலங்கு என்கின்ற கின்னஸ் உலக சாதனையை இவை படைத்துள்ளன.