Hyundai நிறுவனம் தற்போது தமிழ்நாட்டில் பெரிதாக முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது
முக்கியமான முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள போவதாக Hyundai நிறுவனம் அறிவித்துள்ளது. கியா-ஹூண்டாய் என்ற இரண்டுமே தென்கொரியாவை சேர்ந்த ஒரே குழுமம்தான். இப்போது இந்த தென்கொரியாவை சேர்ந்த கியா குழுமம் ஆனது தமிழ்நாட்டில் பெரிய அளவில் முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் காரணமாக தொழில்துறை முதலீடுகள் ஆனது அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு பின்பாக 2022ல் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் முதலீடு வேண்டாம் என்று ஒதுங்கி தெலுங்கானா ஹைதராபாத்தில் முதலீடு செய்த கியா குழுமம் ஆனது தற்போது தமிழ்நாட்டில் பெரிய அளவில் முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
அன்று தமிழ்நாடு – தெலுங்கானா – கர்நாடகா இடையே நடந்த மிகப்பெரிய முதலீட்டு யுத்தத்தில் தமிழ்நாடு ஆனது தோல்வியுற்றது. ஆட்டோமொபைல் தலைமையிடமாக திகழ்ந்த தமிழ்நாடு ஆனது அன்று கியா முதலீட்டை பெற முடியாதது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. தமிழ்நாடு அரசு கியா முதலீட்டை பெறுவதற்கு எவ்வளவோ முயன்றும் பெறமுடியவில்லை. அன்றைய நிலையில் பெரிதாக நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பெரிய அளவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை மற்றும் தமிழ்நாட்டில் பெரிய அளவில் முதலீடுகள் ஆனது குவியவில்லை. அன்று இழந்த மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்பை தற்போது தமிழ்நாடு அரசு ஆனது இன்று பெற்றுள்ளது.
அதன்படி இன்று முதல் கட்டமாக சென்னையில் உள்ள அதன் பேட்டரி அசெம்பிளி ஆலையில் ஹூண்டாய் ஆனது ₹700 கோடி முதலீடு செய்து 2025 ஆம் ஆண்டிற்குள் ஆண்டுதோறும் 75,000 பேட்டரி பேக்குகளை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. தற்போது EV தொழிற்சாலைகள் 2%-க்கும் குறைவாக உள்ள இந்திய சந்தையில் இந்த ₹700 கோடி ஹூண்டாய் பேட்டரி தயாரிப்பு முடிவு ஆனது நல்ல மாற்றத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தமிழ்நாட்டு Hyundai தொழிற்சாலையில் புதிய ரக கார் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது :
சென்னை Hyundai உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட புதிய ரக Hyundai கார் ஆனது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஹூண்டாய் எக்ஸ்டெர் கார் ஆனது சென்னை ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் குறிப்பாக கார், பைக் உற்பத்தியில் தமிழ்நாட்டு சென்னை மாநிலம்தான் முன்னிலை வகித்து வருகிறது. சென்னைதான் ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது. சென்னை முழுக்க அந்த அளவிற்கு கார், பைக் உற்பத்தி மையங்கள் ஆனது அமைக்கப்பட்டு உள்ளன
முதலீடுகள் செய்வதற்கு ஏற்ற மாநிலமாக எப்போதும் பாராட்டப்படும் தமிழ்நாடு மாநிலமானது இந்த 2023-ஆம் வருடமும் முதலீடுகளில் அந்த சாதனையை படைத்துள்ளது. தமிழ்நாடு தொடர்ந்து ஆட்டோமொபைல் மற்றும் உற்பத்தி துறையில் மிகப்பெரிய மாநிலமாக இருக்கும் நிலையில்தான் தற்போது இந்த Hyundai நிறுவன முதலீடும் சென்னையில் மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னையில் Hyundai நிறுவனம் ஆனது மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய முடிவு செய்து இதற்காக முதலீடு செய்ய உள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!