டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க முடிவு செய்துள்ள பாகிஸ்தான் அணிக்கு ஐசிசி எச்சரிக்கை (ICC Warning to Pakistan) விடுத்துள்ளது. இந்திய அணியுடன் இருக்கும் போட்டியை மட்டும் புறக்கணித்து பாகிஸ்தான் அணி மற்ற போட்டிகளில் தொடர்ந்து விளையாட கூடும் என அறிவித்துள்ளது. இந்த முடிவை பாகிஸ்தான் அணி ஆனது திரும்பப் பெறாவிட்டால், அவர்களுக்கு பல்வேறு தடைகள் விதிக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. கிரிக்கெட் உலகில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் அரசு எடுத்துள்ள புறக்கணிக்க முடிவு
தற்போது சில கிரிக்கெட் போட்டிகள் விளையாட்டைத் தாண்டி அரசியல், பொருளாதாரம், உணர்ச்சி, வரலாறு என பல அடுக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வரிசையில் பாகிஸ்தான் – இந்தியா கிரிக்கெட் மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (PCB) தலைவர் மோக்சின் நக்வி உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளிநாட்டுலிருந்து திரும்பிய பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதற்குப் பின்னால் அரசியல் சூழல் உள்ளது என்று பொதுவாக அறியப்படுகிறது. பாகிஸ்தான் அரசு ஆனது தேசிய நலன், பாதுகாப்பு சார்ந்த சூழல் மற்றும் அரசியல் நிலைப்பாடு ஆகியவை அதிகாரப்பூர்வமான காரணங்களாக கூறுகின்றன. அதனால் இந்த முடிவை பாகிஸ்தான் அணி திரும்பப் பெறுமா என்பது குறித்து இன்னும் உறுதியாக தெரியவில்லை.
ஐசிசி விடுத்துள்ள கடும் கண்டனம் மற்றும் எச்சரிக்கை (ICC Warning to Pakistan)
இந்த முடிவை திரும்பப் பெறாவிட்டால், பாகிஸ்தான் அணிக்கு,
- 2 புள்ளிகள் குறைக்கப்படும்
- அபராதம் விதிக்கப்படும்
- நிதி உதவி ரத்து, PSL தடை ஏற்படலாம், என்று ஐசிசி எச்சரித்துள்ளது.
மேலும் பாகிஸ்தான் அணி சூப்பர் 8-க்கு முன்னேறுவது கடினமாகும்.
இந்தியாவின் நிலையை பலப்படுத்தும் கிரிக்கெட் மோதல்
- இதனால் இந்தியா வென்றதாகக் கருதி இந்தியாவுக்கு தானாக 2 புள்ளிகள் வழங்கப்படும்.
- இது ‘சி’ பிரிவில் இந்தியாவின் நிலையை மேலும் பலப்படுத்தும்.
- இந்தியா சூப்பர் 8-க்கு முன்னேறுவதை எளிதாக்கும்.
- உயர் அழுத்தமான போட்டி தவிர்க்கப்படும்.
- இந்திய அணிக்கு மனநலம் மற்றும் உத்தி ரீதியாக பயனளிக்கும்.
இந்திய அணி மற்ற லீக் போட்டிகளுக்கு (நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா) முழு கவனம் செலுத்த முடியும்.
திருப்புமுனையாக மாறும் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் மோதல்
பாகிஸ்தானின் புறக்கணிப்பு மற்றும் ஐசிசியின் எச்சரிக்கை ஆனது எதிர்கால சர்வதேச கிரிக்கெட்டின் விதிமுறைகளை தீர்மானிக்கும் திருப்புமுனையாக மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.