Gistak Media

IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!

IDBI வங்கியில் 2026 ஆண்டுக்கான 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் (IDBI Bank Jobs) பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு மார்ச் 7 அன்று வெளியாகி உள்ளது.

ஐடிபிஐ வங்கியில் காலிபணியிட விவரங்கள்

  • அசிஸ்டண்ட் மேனேஜர் (Grade A) – 200 பணியிடங்கள்
  • ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் (Grade O) – 1,100 பணியிடங்கள்

சம்பள விவரங்கள்

  • அசிஸ்டண்ட் மேனேஜர் (Grade A) – தொடக்க அடிப்படை சம்பளம் Rs. 48,480/-
  • ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் (Grade O) – தொடக்க அடிப்படை சம்பளம் Rs. 45,000/-

விண்ணப்பிக்க தேவையான கல்வித் தகுதி விவரங்கள்

  • பொது வகுப்பினர் மற்றும் OBC வகுப்பினர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • SC/ST/PwD வகுப்பினர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 55% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க (IDBI Bank Jobs) வேண்டும்.
  • அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு (MS Office, இன்டர்நெட்) பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
  • பொது/தனியார் வங்கிகள் மற்றும் நிதி துறையில் (ஃபைனான்ஷியல் ஸெக்டரில்) கட்டாயம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி மற்றும் வயது தளர்வு விவரங்கள் (IDBI Bank Jobs)

  • அசிஸ்டண்ட் மேனேஜர் (Grade A) – குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்ச வயது 30 ஆக இருக்க வேண்டும்.
  • ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் (Grade O) – குறைந்தபட்ச வயது 20 மற்றும் (IDBI Bank Jobs) அதிகபட்ச வயது 25 ஆக இருக்க வேண்டும்.

வகை வாரியாக வயது தளர்வுகள்

  • SC/ST வகுப்பினர் – வயது தளர்வு 5 ஆண்டுகள்
  • OBC (NCL) வகுப்பினர் – வயது தளர்வு 3 ஆண்டுகள்
  • PwD (General) வகுப்பினர் – வயது தளர்வு 10 ஆண்டுகள்
  • PwD (OBC) வகுப்பினர் – வயது தளர்வு 13 ஆண்டுகள்
  • PwD (SC/ST) வகுப்பினர் – வயது தளர்வு 15 ஆண்டுகள்
  • Ex-Servicemen – வயது தளர்வு 5 ஆண்டுகள் (ரிலேவன்ட் சர்வீஸ் கழித்து).
IDBI Bank Jobs - Gistakmedia

தேர்வு செயல்முறை விவரங்கள்

ஐடிபிஐ வங்கி அசிஸ்டண்ட் மேனேஜர் (Grade A) மற்றும் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர்களுக்கான (JAM Grade O) தேர்வு செயல்முறை (IDBI Bank Jobs) ஆன்லைன் எழுதுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது.

தேர்வு தேதி விவரங்கள்

  • ஆன்லைன் தேர்வு நாள் – ஏப்ரல் 12, 2026 ( நேரம் பின்பு அறிவிக்கப்படும்).
  • எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடும் நாள் – மே மாதம் (தோராயமாக).
  • நேர்முகத் தேர்வு நாள்- ஜூன்-ஜூலை 2026 (தகுதியானவர்களுக்கு மட்டுமே அழைப்பு).​

முடிவுகள் வெளியிடும் நாள் 2026-ம் ஆண்டு இறுதியில்.

தேர்வு செயல்முறை விவரங்கள்

  • ஆன்லைன் எழுதுத் தேர்வு – 200 மார்க்
  • நேர்முகத் தேர்வு – எழுத்து தேர்வு (80%) + நேர்முக தேர்வு (20%)

விண்ணப்ப கட்டண விவரங்கள்

  • SC/ST/PWD வகுப்பினர் விண்ணப்ப கட்டணம் ரூ. 250/- செலுத்த வேண்டும்.
  • பிற வகுப்பினர் ரூ. 1050/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

  • விண்ணப்பிக்க தொடக்க நாள் – மார்ச் 8, 2026.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் – மார்ச் 19, 2026.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top