-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
IDBI Recruitment 2025 : ஐடிபிஐ வங்கியில் 650 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஒன்றிய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஐடிபிஐ வங்கி மும்பையை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது (IDBI Recruitment 2025) வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி? வயது வரம்பு? சம்பளம் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
IDBI Recruitment 2025
1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களை நிரப்புவதற்கு (IDBI Recruitment 2025) மொத்தம் 650 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி (Educational Qualification)
ஐடிபிஐ வங்கியில் இந்த உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும் எனவும், கணினி பற்றிய அடிப்படை அறிவு அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.வயது தகுதி (Age)
ஐடிபிஐ வங்கியில் இந்த உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 20 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும் (IDBI Recruitment 2025) என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் SC/ST பிரிவினருக்கு 30 வயது வரையும், OBC பிரிவினருக்கு 28 வயது வரையும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
4.சம்பளம் (Salary)
இந்த உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபருக்கு இரண்டு மாத பயிற்சி காலத்தில் ரூ.15000 ஆயிரமும், பயிற்சி முடிந்த பிறகு மாதம் ரூ.50000 ஆயிரமும் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
ஐடிபிஐ வங்கியில் இந்த உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு (Online Exam) மற்றும் (IDBI Recruitment 2025) நேர்முகத் தேர்வு (Interview) அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள் எனவும், தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, வேலூர், சேலம், திருச்சி, தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறுகிறது.
6.விண்ணப்பிக்க கட்டணம் (Application Fees)
இந்த உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு (IDBI Recruitment 2025) தேர்வு கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.1050 ஆகவும், SC/ST பிரிவினருக்கு ரூ.250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
7.விண்ணப்பிக்கும் முறை (Application Process)
ஐடிபிஐ வங்கியில் இந்த உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு வரும் 1.03.2025 முதல் 12.03.2025 வரை விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!
-
Vadam Movie Review : ஈகோ, காதல், துரோகம்.. என விறுவிறுப்பாக இருக்கிறதா வடம்?
-
India vs New Zealand T20 : டி20 உலகக் கோப்பை.. இந்தியா- நியூசிலாந்து பலப்பரீட்சை! சாதனை படைக்குமா இந்திய அணி?
-
Signs of Diabetes : நீரிழிவு நோயின் 10 ஆரம்ப கால அறிகுறிகள் என்ன?
-
Toxic Movie Release Date : போர் பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?
-
Women's Day 2026 : சர்வதேச மகளிர் தினம்.. வரலாறு, முக்கியத்துவம் & கொண்டாட்டம்.!