Idly Kadai Box Office Day 1: இட்லி கடை திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல்?
நடிகர் தனுஷ், ராஜ்கிரன், சத்யராஜ், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவான ‘இட்லி கடை’ படம் ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று ரிலீஸ் ஆகி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் எவ்வளவு என்பது குறித்து (Idly Kadai Box Office Day 1) தகவலை பார்க்கலாம். நடிகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என தமிழ் சினிமாவில் பன்முக திறமையுடன் திகழ்கிறார் தனுஷ். மேலே குறிப்பிட்ட அனைத்து திறமைகளையும் பயன்படுத்தி, இட்லி கடை படத்தை உருவாக்கி உள்ளார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமான செட்டப்புடன் ஒரு படத்தை எடுப்பதை காட்டிலும், கிராமத்து எளிய கதைகள் ரசிகர்களுடன் மிக விரைவில் கனெக்ட் ஆகும் என்பதால் தனுஷ் இந்த படத்தை எடுத்துள்ளார். அவரின் முயற்சிக்கு பலனும் கிடைத்துள்ளது.
கிராமத்துக் கதை
இட்லி கடை படத்தின் போஸ்டரில் தொடங்கி, டீசர், டிரைலர், பாடல்கள் உள்ளிட்ட அனைத்தும் கிராமத்து கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இட்லி கடை படத்தின் கதையை தனுஷ் தனது சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் அவரின் குழந்தைப் பருவத்தில் தனது கிராமத்தில் அவர் எப்படிப்பட்ட மனிதர்களை எதிர் கொண்டாரோ, அப்படியான வாழ்க்கையை அவர் இந்த படத்தில் படமாக்கியதாக தெரிவித்தார்.
முதல் நாள் வசூல் (Idly Kadai Box Office Day 1)
இட்லி கடை படத்தின் புக்கிங் தொடங்கிய போது பெரிய அளவில் படக்குழுவினருக்கு திருப்தியைக் கொடுக்கவில்லை. கரூரில் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சோகத்தில் அதில் பெரும்பாலான ரசிகர்களின் கவனம் இருந்த நிலையில், படத்தின் புக்கிங் மிகவும் ஸ்லோவாகவே சென்று கொண்டு இருந்தது. சரி படம் ரிலீஸ் ஆன பிறகு ரசிகர்கள் என்ன சொல்கிறார்களோ அதைப் பொறுத்துதான் படம் வெற்றியை நோக்கி நகர்கிறதா? அல்லது தோல்வியை நோக்கி நகர்கிறதா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. இந்நிலையில் ரசிகர்களிடம் இருந்து படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து வருவதால் படக்குழு உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளது. மேலும் இந்த வாரத்தின் இறுதிக்குள் படம் பேமிலி ஆடியன்ஸால் ரசிக்கப்படும் என்ற அளவுக்கு படத்திற்கான விமர்சனங்கள் இருக்கின்றன. வார இறுதி நாட்களில் (Idly Kadai Box Office Day 1) படத்திற்கு எப்படியும் குடும்ப ரசிகர்கள் மற்றும் பெண் ரசிகர்கள் வருவார்கள் என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதேபோல் இட்லி கடை படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூபாய் 10.50 கோடிகள் வசூல் செய்துள்ளதாக சாக்நிக் வலைதளம் (Chaknix) தெரிவித்துள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!