Gistak Media

Idly Kadai Review : தனுஷ் நடித்துள்ள 'இட்லி கடை' படத்தின் திரை விமர்சனம்

தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள ‘இட்லி கடை’ ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரிலீஸ் (Idly Kadai Review) செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷுடன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரகனி, அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே மற்றும் இளவரசன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த இட்லி கடை படம் சூப்பரா? சுமாரா? என்பது குறித்த முழு விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம். 

இட்லி கடை படத்தின் கதை

அப்பா சிவனேசன் (ராஜ்கிரண்) தனது மனைவியுடன் சேர்ந்து கிராமத்தில் உருவாக்கிய இட்லி கடையில் தினமும் அதிகாலையில் எழுந்து ஆட்டுக்கல்லில் மாவும், அம்மி கல்லில் சட்னி அரைத்தும் சிறிய கூரை வேய்ந்த இட்லி கடையை நடத்தி வருகிறார். அது அந்த ஊரின் பழமையான அடையாளமாகவும் உள்ளது. அப்பாவின் இட்லி கடையை பெரிய ஃபிரான்சைஸ் (Franchise) ஆக மாற்ற முடிவு செய்யும் முருகன் (தனுஷ்) முயற்சிக்கு சிவனேசன் (ராஜ்கிரண்) எல்லா இடத்துலையும் நானே சமைக்க முடியுமா? என்று கேட்க தனுஷின் கனவு தவிடு பொடியாகிறது. ஒரு கட்டத்தில் குண்டுச் சட்டிக்குள்ளே குதிரை ஓட்ட முடியாது, நான் மெட்ராஸ் போறேன் என கோபித்துக்கொண்டு (Idly Kadai Review) முருகன் (தனுஷ்) கிளம்ப, அவர் வெளிநாட்டில் வசிக்கும் பெரிய உணவு நிறுவனர் விஷ்ணு வர்தனின் (சத்யராஜ்) நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து பதவி உயர்வு பெற்று சத்யராஜின் மகளையே தனுஷுக்கு கட்டித் தர இருக்கும் நிலையில், தந்தை சிவனேசனின் மறைவு செய்தி அறிந்து தனுது சொந்த ஊருக்கு திரும்பும் முருகன், சத்யராஜின் மகளை திருமணம் செய்து கொண்டாரா? அப்பா உயிருக்கு உயிராக நேசித்த இட்லி கடையை எடுத்து நடத்தினாரா? என்பது தான் ‘இட்லி கடை’ படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு? (Idly Kadai Review)

Idly Kadai Review - Gistakmedia

தனுஷ் கடைசியாக நடித்த ராயன் படத்தில் அதிகளவில் வன்முறையை கையிலெடுத்த நிலையில், அதற்கு எதிர்மறையாக இட்லி கடை படத்தில் வன்முறையை அதிகம் தவிர்த்துவிட்டு அகிம்சையை கையில் எடுத்து ஒரு அழகான இயக்குநராக மாறியிருக்கிறார். படத்தில் அருண் விஜய் தனுஷுக்கு எதிராக செய்யும் செயல்கள், அதற்கு பதிலளிக்கும் விதமாக தனுஷ் ஆற்றும் எதிர்வினை (Idly Kadai Review) அருண் விஜய்யை மேலும், கோபத்திற்குள் ஆழ்த்தும் இடங்கள் எல்லாம் ஹைலைட்டாக உள்ளது. மேலும் படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் பார்த்திபனின் கதாபாத்திரம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், சமுத்திரகனி, நித்யா மேனன் என அனைவரும் தங்களின் கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்துள்ளனர்.

படத்தின் பிளஸ் & மைனஸ்

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே ‘இட்லி கடை’ படத்திற்கு பக்க பலமாக உள்ளது. கிரண் கெளசிக்கின் ஒளிப்பதிவு அந்த முழு கிராமத்தையும் ரம்மியமாக திரையில் காட்டி ரசிக்க வைக்கிறார். வழக்கமாக கத்தி, ரத்தம், துப்பாக்கி என்றில்லாமல், படத்தை சாஃப்ட் இட்லியாகவே தனுஷ் வேகவைத்து கொடுத்துள்ளார். அருண் விஜய், சத்யராஜ் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்தாலும், அவர்களின் கதாபாத்திரங்கள் வலுவாக எழுதப்படாமல் மேலோட்டமாக எழுதப்பட்டு இருப்பது படத்தின் பெரிய குறையாக 2-ம் பாதியில் மாறி நிற்கிறது. ரஜினியின் அண்ணாமலை படத்தை போல 2-ம் பாதி எலிவேட் ஆக நல்ல வாய்ப்பும் இருந்தும் சிம்பிளாகவே இயக்குநர் முடித்து விட்டார். அதேபோல் அருண் விஜய்யின் மன மாற்றத்துக்கு, தனுஷ் தரப்பில் இருந்து ஏதாவது நிகழ்ந்திருந்தால்  படம் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top