IFSC Code (Indian Financial System Code) குறியீடு என்றால் என்ன?
IFSC Code குறியீடு ( Indian Financial System Code – இந்திய நிதி அமைப்புக் குறியீட்டின் சுருக்கம்) என்பது 11 இலக்க எண்ணெழுத்து அமைப்பாகும். நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு மின்னணு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் செயல்படும் மற்றும் பங்கேற்கும் அனைத்து வங்கிக் கிளைகளையும் அடையாளம் காணப் பயன்படும் தனித்துவமான 11 இலக்க எண்ணெழுத்து அமைப்பாகும்.
நாட்டிற்குள் செயல்படும் பல்வேறு வங்கிக் கிளைகளில் குறிப்பிட்ட வங்கிக் கிளை தொடர்பானது. IFSC குறியீடு அனைத்து வங்கி பரிவர்த்தனைகளையும் IFSC குறியீடு கண்டறிந்து கண்காணிக்கும். இது ஒவ்வொருவருக்கும் ரிசர்வ் வங்கி நியமிக்கப்பட்டுள்ளது.
IFSC குறியீட்டில் உள்ள முதல் நான்கு எழுத்துகள் வங்கியின் பெயரைக் குறிக்கும் எழுத்துக்கள் ஆகும், அதைத் தொடர்ந்து 0, பின் அதைத் தொடர்ந்து கடைசி ஆறு இலக்கங்கள் வங்கிக் கிளையைக் குறிக்கும்.
IFSC குறியீட்டில் உள்ளபூஜ்ஜியம் பின் எதற்காக ?
ஒவ்வொரு செல்லுபடியாகும் IFSC குறியீடும் அதன் ஐந்தாவது இலக்கமாக பூஜ்ஜியத்தைக் கொண்டிருக்க வேண்டும். IFSC குறியீட்டில் உள்ள இந்த பூஜ்ஜியம் எதிர்கால பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
IFSC குறியீடு ஒரு குறிப்பிட்ட வங்கியை அடையாளம் கான ஒரு வழியாக இருப்பதால், இது பாதுகாப்பான பரிவர்த்தனைகளுக்கு உதவுகிறது, ஏதேனும் தவறுகள் அல்லது மோசடிகளின் வாய்ப்புகளைத் தடுக்கிறது. IFSC குறியீடு வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் transcation செய்யும் போது சரியான வங்கி மற்றும் அதன் கிளையை அடையாளம் காண உதவுகிறது. IFSC குறியீடு RTGS, NEFT அல்லது IMPS முறையை பயன்படுத்தி பணத்தை மாற்ற உதவுகிறது.






