Gistak Media – Cinema News | Trending News | Latest News

IIT Madras Tops NIRF Rankings : சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக சென்னை ஐஐடி (IIT Madras Tops NIRF Rankings) முதலிடம் பிடித்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம் (Ministry of Education) ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உள்ள நிறுவனங்களை பல்கலை மற்றும் மேலாண்மை, பொறியியல் என பல்வேறு பிரிவுகளில் திறனாய்வு செய்து, தேசிய நிறுவன தரவரிசையை வெளியிடும். இது கல்வித் துறையினர் மத்தியில் மிகுந்த மதிப்போடு பார்க்கப்படும் ஒரு மதிப்பீடாகும். அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை தலைநகர் டெல்லியில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய கல்வித் துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் அவர்கள் வெளியிட்டுள்ளார். 

இந்தியாவில் உள்ள மொத்தம் 14,163 நிறுவனங்களின் கடந்த ஒரு வருட செயல்பாடுகளை பல்வேறு தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்து உருவாக்கப்பட்ட, இந்த தரவரிசைப் பட்டியலில், தமிழகத்தின் கல்வி நிறுவனங்கள் சிறப்பான இடங்களை பெற்றுள்ளன. மேலும் தேசிய அளவில், கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலில் 33வது இடமும், நாட்டின் தலைசிறந்த முதல் 100 உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் 17வது இடமும், சிறந்த 50 மாநிலப் பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் 10வது இடமும் என புள்ளி பட்டியலில் தமிழநாடு முதன்மையான இடத்தை பெற்றுள்ளது.

சென்னை ஐஐடி முதலிடம் (IIT Madras Tops NIRF Rankings)

IIT Madras Tops NIRF Rankings - Gistakmedia

நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் முதல் 100 இடங்களுக்குள் வந்த தமிழகத்தின் 17 நிறுவனங்களில், சென்னை ஐஐடி, சென்னை வி.ஐ.டி, எஸ்.ஆர்.எம், அமிர்தா விஸ்வ வித்யாபீடம், சவீதா ஆகிய நிறுவனங்கள் முதல் 5 இடங்களில் (IIT Madras Tops NIRF Rankings) வந்துள்ளன. மேலும் தேசிய அளவில் மிகவும் கவனிக்கத்தக்க இடங்களைப் பெற்ற தமிழக கல்வி நிறுவனங்களில், சென்னை ஐஐடி (Chennai IIT) சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. மேலும் பொறியியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான பிரிவிலும், தேசிய அளவிலும்  சென்னை ஐஐடி முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி-க்கு அடுத்து, கவனம் ஈர்க்கும் இடத்தை அண்ணா பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது தரவரிசை பட்டியலில் சற்று சறுக்கலை சந்தித்திருந்தாலும், மாநில அரசுகள் நடத்தும் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் 2-ம் இடத்தை அண்ணா பல்கலைக்கழகம் பிடித்துள்ளது. மேலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான தரவரிசை பிரிவிலும் முதல் 10 இடங்களுக்குள் அண்ணா பல்கலைக்கழகம் இடம் பெற்றுள்ளது. அதேபோல் ஆராய்ச்சி, மேலாண்மை, சட்டம், மருத்துவம், கட்டுமானவியல் என 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இடம்பெற்று தனியார் கல்வி நிறுவனங்களில் தரவரிசையில் வலுவான இடத்தை பெற்றுள்ளது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top