Gistak Media

IMD Warns of Tamil Nadu Heatwave : தமிழகத்தில் மார்ச் முதல் மே வரை வெப்ப அலை வீசும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

இந்திய வானிலை ஆய்வு மையம் ஆனது தமிழகத்தில் மார்ச் முதல் மே வரை வெப்ப அலை வீசும் என (IMD Warns of Tamil Nadu Heatwave) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வெப்ப அலை எச்சரிக்கை

வெப்ப அலை எச்சரிக்கை என்பது ஒரு காலநிலை பற்றிய செய்தி மட்டுமல்ல. வெப்ப அலை என்பது ஒரு இயற்கை பேரிடர் ஆகும். இது அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கொண்ட காற்று நீண்ட நேரம் நிலைத்திருப்பதால் ஏற்படுவதாகும். இந்த இயற்கை பேரிடர் ஆனது மனித உடல்நலத்திற்கும், மற்றும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீங்கை விளைவிக்கும். இது மனிதனின் சுகாதாரம், பொருளாதாரம், விவசாயம் மற்றும் நகர வாழ்வு ஆகிய அனைத்தையும் பாதிக்கின்ற ஒரு ஒருங்கிணைந்த (IMD Warns of Tamil Nadu Heatwave) சவால் ஆகும். இந்த கோடைகால நிலையை பாதுகாப்பாக கடக்க மக்களின் விழிப்புணர்வு, அரசின் திட்டமிடல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முறைப்படி மேற்கொள்ள வேண்டும்.

உலகளவில் வெப்பமயமாதல் வேகம் அதிகரித்துள்ளது

விஞ்ஞானிகள் மற்றும் வானிலை ஆய்வு மையங்கள் உலகளவில் வெப்பமயமாதல் வேகம் ஆனது அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளனர். தமிழக சராசரி கோடை வெப்பம் 1975-ல் 34°C ஆகும். அது 2025-ல் 38°C-யாக உயர்ந்தது. தற்போது  43°C முதல் 45°C வரை கூட (IMD Warns of Tamil Nadu Heatwave) உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலநிலை மாற்ற தரவுகள் ஆனது வெப்பமயமாதலின் வேகம் ஆனது அதிகரித்துள்ளதை காட்டுகின்றன.

தமிழகத்தின் 2026 கோடைகாலம் மிகவும் கடுமையாக இருக்கலாம்

தமிழகத்தின் 2026 கோடைகாலத்தில் வழக்கத்தை விட 15 நாட்கள் வரை வெப்ப அலை நீடிக்கக்கூடும் என்றும் குறிப்பாக வட தமிழக பகுதிகளில் (குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற தமிழக பகுதிகளில்) வெப்பநிலை ஆனது 43°C முதல் 45°C வரை கூட உயரக்கூடும் (IMD Warns of Tamil Nadu Heatwave) என்றும் எச்சரித்துள்ளது. இது தமிழகத்தின் 2026 கோடைகாலத்தை மிகவும் கடுமையான கோடைகாலமாக மாற்றலாம்.

IMD Warns of Tamil Nadu Heatwave - Gistakmedia

வெப்ப அலையை சமாளிக்க தமிழக அரசின் நடவடிக்கைகள் (IMD Warns of Tamil Nadu Heatwave)

தமிழக அரசு “Heat Action Plan” ஒன்றை செயல்படுத்த உள்ளது. இந்த “Heat Action Plan” -ன் கீழ் தேவையான இடங்களில்,

  • குடிநீர் முகாம்கள்,
  • தற்காலிக குளிர் மையங்கள்,
  • பொது விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகியவற்றை முன்னெடுக்கத் தெளிவாக திட்டமிட்டுள்ளது.

மக்கள் வெப்ப அலையை சமாளிக்க செய்ய வேண்டியவை

  • அடிக்கடி அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • உடலை ஒட்டி இருக்கமாக இல்லாமல் பருத்தி உடை அணிய வேண்டும். மெல்லிய பருத்தி உடைகள் மிகவும் நல்லது.
  • மதிய வேளைகளில் குறிப்பாக 11 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
  • தேவைப்படும் நேரங்களில் இளநீர் மற்றும் ORS பயன்படுத்த வேண்டும்.
  • முதியவர்கள் மற்றும் நோயாளிகள் விஷயத்தில் கூடுதல் கவனம் மேற்கொள்ள வேண்டும்.
  • வெயிலில் செல்லும் போது குடை, மற்றும் சன் கிளாஸ் (IMD Warns of Tamil Nadu Heatwave) பயன்படுத்துதல் மிகவும் நல்லது.
  • உப்பு, மற்றும் சர்க்கரை சம அளவில் கலந்த பானங்கள் உட்கொள்ள வேண்டும்.
  • உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்த நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை அடிக்கடி உண்ண வேண்டும். தர்பூசணி, முலாம்பழம், ஆரஞ்சு, வெள்ளரி, மற்றும் சுரைக்காய் ஆகியவை சிறந்தன ஆகும்.
  • அதிகாலை 5-7 மணி அல்லது மாலை 6-8 மணி நேரங்களில் உடற்பயிற்சி செய்து உடல் வெப்பத்தை அதிகரிக்காமல் ஆரோக்கியத்தை பராமரிப்பது நல்ல உதவும்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top