மனித உடலில் பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சை போன்ற கிருமிகள் நுழைவதைத் தடுப்பதற்கும், மற்றும் நுழைந்த கிருமிகள் பாதிக்காத வண்ணம் அவைகளை எதிர்த்துப் போராடுவதற்கும் நோய் எதிர்ப்பு சக்தி மிக முக்கியமாக தேவைப்படுகிறது. மனித உடலில் இயற்கையாக அமைந்துள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில பானங்கள் (Immunity boosting drinks)உதவுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பானங்கள்
● கிரீன் டீ
பல நன்மைகளைக் கொண்டுள்ள கிரீன் டீ (Green Tea) ஆனது பண்டைய காலத்திலிருந்தே ஆசிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கேடசின்கள் (Catechins) நிறைந்த (Immunity boosting drinks) கிரீன் டீ (Green Tea) மனித உடலில் உள்ள நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றன. குறிப்பாக கிரீன் டீயில் உள்ள EGCG என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உடலின் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் உடலின் வீக்கத்தைக் குறைக்கிறது.
● நெல்லிக்காய் சாறு
நெல்லிக்காய் வைட்டமின் சி நிறைந்த கனி ஆகும். இது உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை சிறந்த முறையில் அதிகரிக்கிறது.
● மஞ்சள் பால்
அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ள பாலில் மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து(Immunity boosting drinks) குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் (Curcumin) என்ற மூலப்பொருளானது பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்மையை கொண்டுள்ளன. இரவு தூங்குவதற்கு முன் இதை உட்கொள்வது சிறந்த பலன்களை தரும்.
● இஞ்சி தேநீர்
சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்து போராட இஞ்சியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பெருமளவில் உதவுகின்றன.
● பீட்ரூட் ஜூஸ்
பீட்ரூட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன. இவை மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. குறிப்பாக பீட்ரூட்டில் பொட்டாசியம், மற்றும் இரும்புச் சத்துகள் அதிக அளவில் உள்ளன.
● சிட்ரஸ் பழச்சாறுகள்
ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சைப்பழம் போன்றவற்றில் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. இது சிறந்த முறையில் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
● பப்பாளி இலை சாறு
பப்பாளி இலைகளில் (Immunity boosting drinks) ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் (A, B, C, D, E) அதிகம் அளவில் உள்ளன. இவை கசக்கும் தன்மை உடையவை. இவை இரத்தத் தட்டணுக்களின் (Platelets) எண்ணிக்கையை அதிகரிக்க உதவுவதால் டெங்கு காய்ச்சலின் போது சிறந்த முறையில் பலனளிக்கின்றன.
● பெர்ரி ஸ்மூத்தி சாறு
பெர்ரி ஸ்மூத்தி சாறு என்பது ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி மற்றும் பிளாக்பெர்ரி ஆகியவை கலந்த சாறு ஆகும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோகெமிக்கல்கள் நிறைந்துள்ள ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி மற்றும் பிளாக்பெர்ரி ஆகியவை மனித உடலை செல் பாதிப்பிலிருந்து பாதுகாக்கின்றன மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
● தக்காளி ரசம்
தென்னிந்தியாவில் தக்காளி ரசம் மிகவும் பிரபலமானது. தக்காளியில் நிறைந்துள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் (Immunity boosting drinks). தக்காளி ரசத்தில் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய் நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.
● மூலிகை கஷாயம்
துளசி இலைகள், இலவங்கப்பட்டை தூள், மிளகுத் தூள், உலர் இஞ்சி மற்றும் திராட்சை அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டவை ஆகும். இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மற்றும் இரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் உதவுகின்றன. துளசி, லவங்கப்பட்டை, இஞ்சி மற்றும் கருப்பு மிளகு சேர்த்து காய்ச்சிய மூலிகை கஷாயம் ஆனது தொண்டை கரகரப்பு மற்றும் சளிக்கு நல்ல நிவாரணத்தை வழங்குகிறது.