ஆஃப்கானிஸ்தான் அணி ஆனது வரும் ஜூன் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று (IND vs AFG Schedule) விளையாட உள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆனது இதற்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை 02.03.226 அன்று வெளியிட்டுள்ளது.
டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் அட்டவணை
இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் இரு அணிகளுக்கும் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் தொடர் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் ஒருநாள் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் போட்டி விவரங்கள் (IND vs AFG Schedule)
முதல் ஒருநாள் போட்டி- ஜூன் 14 அன்று தர்மசாலா.
இரண்டாவது ஒருநாள் போட்டி- ஜூன் 17 அன்று லக்னோ.
மூன்றாவது ஒருநாள் போட்டி- ஜூன் 20 அன்று சென்னை.
இந்தத் தொடரில் நடைபெற உள்ள ஒரேயொரு டெஸ்ட் போட்டி விவரம்
டெஸ்ட் போட்டி- ஜூன் 6, 2026 முதல் 10, 2026 வரை – புதிய சண்டிகர்
தொடக்க நேரம் – காலை 9:30 மணி இந்தத் தொடரில் ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் ஆனது நடைபெற உள்ளது.
சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம்
மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆனது பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் அதாவது புதிய சண்டிகரில் அமைந்துள்ளது. இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (IND vs AFG Schedule) ஐபிஎல் மற்றும் டி20 போட்டிகள் ஏற்கனவே நடைபெற்றிருந்தாலும், டெஸ்ட் போட்டி நடைபெறவிருப்பது இதுவே முதல்முறையாகும். ஜூன் 6ஆம் தேதி தொடங்கி ஜூன் 10ஆம் தேதி வரை இந்த இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.
நேரடி ஒளிபரப்பு சேனல் விவரங்கள்
- நேரடி ஒளிபரப்பு – தேசிய விளையாட்டு சேனல்கள்
- OTT ஸ்ட்ரீமிங் – ஹைடெஃபினிஷன் வசதி
டிவி ஒளிபரப்புகள் ஆனது பிசிசிஐ தொடர்களுக்கு பொதுவாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) சேனல்கள் மூலம் நடைபெறும். அதேபோல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் ஆனது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) ஆப் மூலம் கிடைக்கும். தமிழக மக்கள் ஹாட்ஸ்டாரில் தமிழ் ஆப்ஷனை (IND vs AFG Schedule) தேர்ந்தெடுக்கலாம். இந்த தொடர் ஜூன் மாதத்தில் தொடங்க இருப்பதால், இந்த 2026 இந்தியா-ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான நேரடி ஒளிபரப்பு விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
கிரிக்கெட் உலகம் காத்திருக்கிறது
இந்த இந்தியா – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர் ஆனது ஆப்கான் அணியின் கிரிக்கெட் வளர்ச்சியை கவனித்து வரும் உலக ரசிகர்களுக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. இந்தியா–ஆப்கானிஸ்தான் டெஸ்ட் மற்றும் ODI தொடர் மூலம் ஒரு வலிமையான அணியின் நிரூபிப்பு நடைபெற உள்ளது.