Gistak Media

IND VS AUS 2nd Test: தொடரை கைப்பற்றிய இந்திய அணி

IND VS AUS 2nd Test: இரண்டாவது இன்னிங்ஸில்  இந்திய அணியின் பந்துவீச்சால் ஆஸ்திரேலியா அணியானது அடுத்தடுத்த விக்கெட்களை இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டனர். இதனை தொடர்ந்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியானது 78.4 ஓவரில் தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 263 ரன்கள் எடுத்து இன்னிங்சை நிறைவு செய்தது. இதையடுத்து இந்திய அணி 262 ரன்களில் தனது அனைத்து விக்கெட்களையும் இன்னிங்சை முடிவு செய்தது. இதனை தொடர்ந்து 1 ரன் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஆட்ட நேர முடியில் 61 ரன்கள் எடுத்து 1 விக்கெட்டை இழந்தது. இதன் மூலம் யார் வெற்றி பெறுவார் என்ற பரபரப்பான கட்டத்தில் இருந்தது.

இதனைத் தொடர்ந்து 3 வது நாள் தொடர்ந்து நேற்று தொடங்கியதும் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே ஆஸ்திரேலிய அணியின் அனைத்து விக்கெட்களையும் இந்திய அணி வீழ்த்தியது. ஜடேஜா மற்றும் அஸ்வின் இருவரும் சேர்ந்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜடேஜா 7 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் விழித்தினர். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஹெட் 43 ரன்களும், லபுஸ்சேன் 35 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். 31.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 113 ரன்களை எடுத்து ஆஸ்திரேலியா அணி 114 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்திய அணி இதைத்தொடர்ந்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரை தொடர்ந்து விளையாடிய ரோஹித் சர்மா 20 பந்துகளில் 31 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 20 ரன்களும், இவரை தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் 12 ரங்கள் எடுத்தார். விக்கெட் கீப்பர் எஸ்.கே. பரத் 23 ரன்களும், புஜாரா 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணியானது 4 விக்கெட்களை இழந்து 26.4 ஓவரில் 118 ரன்கள் எடுத்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி இந்த வெற்றிக்கு பிறகு 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top