Gistak Media

IND vs AUS 3rd ODI : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி..!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், ரோகித் – கோலியின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி (IND vs AUS 3rd ODI) பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டியில் விளையாடுகிறது. இதில், பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடந்த 2வது போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலிய அணி வென்றது. இதன் மூலம் அந்த அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.

ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில், அந்த அணியில் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் – டிராவிஸ் ஹெட் ஜோடி களமிறங்கினர். அணிக்கு வலுவான தொடக்கம் கொடுத்த நிலையில் ஹெட் 29 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 41 ரன்னிலும் வெளியேறினர். பிறகு களமிறங்கிய ரென்ஷா ஒருபுறம் நிலைத்து நின்று ஆடி 56 ரன்னில் அவுட் ஆக மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன. 46.4 ஓவரில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டையும் இழந்து 236 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 237 ரன்கள் வெற்றி இலக்காக (IND vs AUS 3rd ODI) நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும், சிராஜ்,  குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, அக்‌சர் பட்டேல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இதனைத் தொடர்ந்து, 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் – ரோகித் சர்மா ஜோடி களமிறங்கினர். அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த இந்த ஜோடியில் கில் 24 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதன் பிறகு ரோகித் – கோலி ஜோடி தங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருவரும் அரைசதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடியை உடைக்க ஆஸ்திரேலிய பவுலர்கள் கடுமையாக போராடினர். ஆனாலும், அவர்களது பந்து சிதறவிட்டு சிறப்பான ரன் குவிப்பில் ஈடுபட்ட இந்த ஜோடியில் ரோகித் சர்மா 105 பந்துகளில் தனது 33வது சர்வதேச ஒருநாள் சதத்தை சிட்னி மண்ணில் விளாசினார். மேலும் ஆஸ்திரேலியாவில் அதிக சதம் விளாசிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

IND vs AUS 3rd ODI - Gistakmedia

இந்தியா அபார வெற்றி (IND vs AUS 3rd ODI)

சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா – கோலி ஜோடி 38.3 ஓவர்களில் இலக்கை எட்டிய நிலையில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. ஆட்ட நாயகன் விருதை ரோகித் சர்மா வென்று அசத்தினார். ஆஸ்திரேலிய மண்ணில் 2-1 என்ற கணக்கில் தொடரை இந்தியா (IND vs AUS 3rd ODI) இழந்தாலும், முன்னணி வீரர்களான ரோகித் மற்றும் கோலி மீண்டும் பார்முக்கு வந்திருப்பது இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top