IND VS AUS 3rd Test: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் டிராபி (Border Gavaskar Trophy)டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இந்தூரில் நேற்று(01.03.2023) தொடங்கியது. இந்திய அணியானது டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 109 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை எடுத்துள்ளது.
IND VS AUS 3rd Test: Day -1
முதலில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் பேட்டிங் இந்திய அணிக்கு கைகொடுக்கவில்லை. ரோகித் சர்மா 27 ரன்கள் மட்டும் எடுத்து முதல் விக்கெட்டாக அவுட் ஆனார். இதனை தொடர்ந்து வந்த வீரர்கள் யாரும் சரியாக விளையாடவில்லை. பிறகு இந்திய அணியின் பேட்டிங் தர வரிசையானாது சரிய தொடங்கியது. அணியின் சரிவை யாராலும் மீட்டெக்க முடியவில்லை. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் இந்திய விக்கெட்டுகளை வீழ்த்திக்கொண்டே இருந்தனர். இறுதியாக இந்திய அணி 33.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 109 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணியில் விராட் கோலி 22 ரன்களும், சுப்மான் கில் 21 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குஹ்னேமன் 5 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன் பின்னர், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ‘உஸ்மான் கவாஜா’ முதல் இன்னிங்ஸைத் தொடங்கினார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களில் ஒருவர், ட்ராவிஸ் ஹெட் ஆட்டமிழந்த போதிலும் சிறப்பாக விளையாடி 60 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை எடுத்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது கணிக்க முடியாத ஒன்று. இருப்பினும் இந்தியாவை விட ஆஸ்திரேலியா சற்று முன்னிலையில் உள்ளது.
IND VS AUS 3rd Test: Day -2
163 ரன்களில் ஆல் அவுட் ஆன இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு 76 ரன்கள் இலக்கு…
88 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இந்த இன்னிங்ஸில் இந்தியா பெரிய ஸ்கோரை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் சரியான பார்ட்னர்ஷிப் அமைக்கத் தவறினர். இந்திய அணியில் கில், ரோஹித், கோலி, ஜடேஜா, ஷ்ரேயாஸ் ஐயர், பாரத், அஷ்வின், புஜாரா, உமேஷ் யாதவ், சிராஜ் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் புஜாராவும், ஷ்ரேயாஸ் ஐயரும் 35 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதுவே இந்திய அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். இதனை தொடர்ந்து இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.
இந்த தொடரில் இந்திய அணிக்கு ஒரே ஆறுதல் புஜாராவின் ஆட்டங்கள் இருந்தது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் உடனடியாக ஆட்டம் இழக்க, புஜாரா மிகவும் பொறுப்புடன் விளையாடி அரை சதத்தை கடந்தார். புஜாரா 59 (142) ரன்களுடன் 2-வது நாள் முடிவில் இந்தியா 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ‘நாதன் லயன்’ சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தியதால், 23.3 ஓவரில் 64 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2-வது நாள் முடிவில் இந்தியா 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் லயன் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு 2வது இன்னிங்சில் 76 இலக்காக வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இன்று நடைபெறவுள்ள 3வது நாளில் ஆஸ்திரேலிய அணி 76 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கவுள்ளது.
IND VS AUS 3rd Test: Day -3
76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. மூன்றாவது நாளின் தொடக்கத்தின் 2வது பந்திலேயே அஷ்வின் கவாஜாவை வெளியேற்றினார். இது இந்திய ரசிகர்களுக்கு சற்று நம்பிக்கையை அளித்துள்ளது. ஆனால் மார்னஸ் லாபசாக்னே மற்றும் டிராவிஸ் ஹேட் ஆகியோர் ரசிகர்களின் நம்பிக்கையை அழித்தார்கள்.
சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 49 ஓட்டங்களையும், மார்னஸ் 28 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் இருக்க, ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்புக்கு 78 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசிய நாதன் லயன் போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கடந்த 10 ஆண்டுகளில் சொந்த மண்ணில் இந்தியா தோல்வியடைந்த 3வது டெஸ்ட் போட்டி இதுவாகும்.