Ind Vs Aus T20 Match : 4வது T20 போட்டி.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே 5 (Ind Vs Aus T20 Match) போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆனது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் மழை காரணமாக முதல் போட்டி பாதியில் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடைபெற்ற 2வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா ஹோபர்ட்டில் நடந்த 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்றது. இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா 1-1 என்ற சமநிலை கணக்கில் உள்ள நிலையில் நேற்று (6.11.2025) 4வது டி20 போட்டி கோல்டு கோஸ்டில் உள்ள கராராவில் நடை பெற்றது. இதில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-1 என முன்னிலை பெற்றது.
இந்திய அணியினர் அதிரடியாக விளையாடி விரைவாக 167 ரன்கள் எடுத்தனர் (Ind Vs Aus T20 Match)
கோல்டு கோஸ்டில் உள்ள கராராவில் நேற்று (6.11.2025) தொடங்கிய 4-வது டி20 போட்டியில் டாஸை வென்ற ஆஸ்திரேலியா அணி ஆனது பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மன் கில் சிறப்பை சேர்த்தனர். அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடி விரைவாக 28 ரன்கள் எடுத்தார். அதன்பின் ஆட்டமிழந்தார். நாதன் எல்லீஸ் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டை கைப்பற்றினார். ஷுப்மன் கில் சிறப்பாக விளையாடி 46 ரன்களை பெற்றுத் தந்தார். அக்சர் படேல் இன்னிங்ஸின் இறுதியில் அதிரடியாக விளையாடி விரைவாக 167 ரன்கள் எடுக்க உதவினார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 167 ரன்கள் பெற்றது.
இந்திய அணியினரின் சிறந்த பந்துவீச்சு ஆஸ்திரேலிய அணியினரைத் திணறடித்தது
இந்தியப் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் பெரும் பலமாக இருந்தது. மேலும் ஆஸ்திரேலிய அணியினரைத் திணறடித்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி ஆனது களமிறங்கியது. மிட்செல் மார்ஷ் மற்றும் மேத்யூ ஷார்ட்டின் ஆகிய இருவரும் ஆஸ்திரேலியா அணிக்கு சிறந்த தொடக்கத்தை தந்தனர். ஆனால்,மேத்யூ ஷார்ட்டின் விக்கெட் இழப்பிற்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் ஆட்டமானது மிடில் ஆர்டர் சீட்டுக் கட்டு போல கலைந்தது. அக்சர் படேலின் சிறந்த பந்துவீச்சு ஆஸ்திரேலிய அணியின் அடுத்தடுத்து விக்கெட்டுகளைக் கைப்பற்ற உதவியது. முக்கியமான மிட்செல் மார்ஷ் விக்கெட்டை ஷிவம் துபேவின் சிறந்த பந்துவீச்சு வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவின் ஆட்டமானது தகர்த்தப்பட்டது. இறுதியில் ஆஸ்திரேலிய அணி மீண்டு வர எந்த வாய்ப்பும் கொடுக்காமல் வாஷிங்டன் சுந்தர் மூன்று முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் இந்தியாவின் வெற்றிக்கு பெருந்துணையாக இருந்தார். ஆஸ்திரேலியா 119 ரன்களுடன் சுருண்டு தோல்வியைத் தழுவியது. அக்சர் பட்டேல் 4வது (Ind Vs Aus T20 Match) டி20 போட்டியின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பேட்டிங்கில் 21 ரன்களும், மற்றும் பவுலிங்கில் 2 விக்கெட்டுகளும் வீழ்த்திய அக்சர் பட்டேல் 4வது டி20 போட்டியின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!