Gistak Media – Cinema News | Trending News | Latest News

IND vs NED : டி20 உலகக் கோப்பை.. நெதர்லாந்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.!

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா ஆனது நெதர்லாந்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் (IND vs NED) வீழ்த்தி வெற்றி பெற்றது. லீக் சுற்றில் இந்தியா தான் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் கெத்தாக சூப்பர் 8 சுற்றில் நுழைந்துள்ளது.

ஷிவம் துபே அதிரடி ஆட்டம்

நெதர்லாந்திற்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களின் சொதப்பல் ஆட்டம் அணிக்கு பெரிய கவலையை தந்தது. அபிஷேக் சர்மா ரன்கள் எடுக்காமல் இரண்டாவது பந்திலேயே டக் அவுட் ஆகி பெவிலியன் (IND vs NED) திரும்பினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி 34 ரன்களும், மற்றும் ஹர்திக் பாண்டியா 30 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் தொடக்கம் மிகவும் மோசமாக இருந்தது. ஷிவம் துபே உறுதியாக நின்று 31 பந்துகளில் 66 ரன்களை வேகமாக எடுத்தார். ஹர்திக் பாண்டியாவுடன் ஜோடி சேர்த்து ஷிவம் துபே அபாரமாக விளையாடினார். ஷிவம் துபே சிக்சர் மழை பொழிந்தார். வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் மற்றும், ஷிவம் துபே 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

நெதர்லாந்து பேட்ஸ்மேன்களை முடக்கிய வருணின் மாயாஜால பந்துவீச்சு

பின்பு விளையாடிய நெதர்லாந்து அணி 20 ஓவரில் 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாஸ் டி லீட் 33 ரன்கள் எடுத்தார். வருண் சக்கரவர்த்தியின் மாயாஜால பந்துவீச்சு நெதர்லாந்து (IND vs NED) பேட்ஸ்மேன்களை முடக்கியது. வருண் சக்கரவர்த்தி 3 ஓவரில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்தார். வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளும், ஷிவம் துபே 2 விக்கெட்டுகளும், பும்ரா, ஹர்திக் பாண்டியா தலா 1 விக்கெட்டும் சாய்த்தனர். நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

IND vs NED - Gistakmedia

ஷிவம் துபே ஆல்ரவுண்டராக ஜொலித்தார் (IND vs NED)

ஆல்ரவுண்டராக பேட்டிங் மற்றும் பவுலிங்கில் கலக்கிய ஷிவம் துபே ஆட்டநாயகன் விருது வென்றார். ஷிவம் துபே 31 பந்துகளில் 6 சிக்சர்கள், 4 பவுண்டரியுடன் 66 ரன்களை குவித்தார். ஷிவம் துபே 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இந்திய அணியை வெற்றி பெற வைத்த இருவர்

டாப் ஆர்டர் வீரர்களின் சொதப்பல் இந்திய அணிக்கு பெரிய கவலையை தந்த போதும் ஷிவம் துபே, வருண் சக்கரவர்த்தி போன்ற வீரர்களின் சிறப்பான செயல்பாடு அணிக்கு வலுவைச் சேர்த்தது. ஷிவம் துபேவின் அதிரடி பேட்டிங்கும், மற்றும் வருண் சக்கரவர்த்தியின் சுழல் மேஜிக்கும் இந்திய அணியை வெற்றி பெற வைத்தது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top