Gistak Media

IND VS NZ 2nd T20 Highlights: India Win By 6 Wickets

IND VS NZ 2nd T20 Highlights: இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான இரண்டாவது T20 போட்டியானது லக்னோவில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி கடைசி வரை போராடி வெற்றி பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டெவான் கான்வே மற்றும் ஃபின் ஆலன் ஆகிய இருவரும் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து மார்க் சாப்பேன் 14 ரன்கள் , க்ளென் ஃபிலிப்ஸ் 5 ரன்கள் மற்றும் டேரைல் மிட்செல் 8 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்தனர். மைக்கேல் பிரேஸ்வெல் 14 ரன்கள் மட்டுமே அடித்தார். இதை தொடர்ந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னெர் 19 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். நியூசிலாந்து அணியை இந்திய பந்து வீச்சாளர்கள் ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தி 99 ரன்களில் சுருண்டனர்.

இலக்கை நோக்கி களமிறங்கிய அணியும் தடுமாற்றமான விளையாட்டை வெளிப்படுத்தியது. இதில் தொடக்க ஆட்ட வீரர் ஷுப்மன் கில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து இஷான் கிஷான் 19 ரன்கள் எடுத்து ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். ராகுல் திரிபாதி 13 ரன்களில் ஆட்டத்தை இழந்தார். இவர்களை தொடர்ந்து சூரியகுமார் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் வாஷிங்டன் எதிர்பாராத விதமாக 10 ரன்கள் எடுத்து ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்தாக களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா சூரியகுமாருடன் இணைந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். இந்திய அணி 19.5 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியானது போராடி வெற்றி பெற்றது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top