டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில், இந்தியா – ஜிம்பாப்வே மோதும் முக்கிய ஆட்டம் சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் (Ind vs Zim) மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வியடைந்த பிறகு அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க, இந்தியாவுக்கு இது கட்டாயம் வெற்றி பெற வேண்டிய போட்டியாகும்.
இன்றைய போட்டி இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பை தீர்மானிக்கும்
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 7-ம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் குரூப் 1-ல் இடம் பிடித்துள்ள இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோத உள்ளன. சென்னை சேப்பாக்கத்தில் இன்று (பிப்.26) நடைபெற உள்ள இந்தப் போட்டியானது இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பைத் தீர்மானிக்கும் முக்கியத்துவம் (Ind vs Zim) வாய்ந்த ஒரு போட்டி ஆகும். சூப்பர் 8-ல் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியுற்ற இந்தியாவுக்கு இது ஒரு must-win போட்டி ஆகும்.
இந்தியாவின் அரை இறுதி வாய்ப்புகள் - ஒரு கணிப்பு (Ind vs Zim)
தற்போது இந்தியாவின் நிகர ரன் ரேட் ஆனது -3.80 ஆக உள்ளது. எனவே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால், ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் மிகப்பெரிய (Ind vs Zim) வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இந்தியா ஆனது ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸை வென்றால் 4 புள்ளிகள் பெறும். மிகப்பெரிய வெற்றி ஆனது இந்தியாவின் NRR-ஜ மேம்படுத்தும். மேற்கிந்திய தீவுகள் அணி தென்னாப்பிரிக்காவிடம் தோற்றால், இந்திய அணியின் பாதை தெளிவாக இருக்கும்.
தற்போதைய இந்திய அணியில் Top-order Firepower உள்ளது ஆனால் Power play consistency ஆனது இல்லை. சில நேரங்களில் பந்துவீச்சு கட்டுப்பாடு சரியான விதத்தில் இல்லை. இந்திய அணிக்கு Toss முக்கியம். இந்திய அணி முதலில் பௌலிங் செய்து பின்பு பேட்டிங் செய்தால் 70% நன்மைகளை எதிர்ப்பார்க்கலாம்.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி
இந்திய அணியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் வைஸ் கேப்டன் அக்ஸர் படேல் தலைமையில், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரிங்கு சிங், ஜாஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சகரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன், திலக் வர்மா ஆகியோர் விளையாட உள்ளனர். சம்சன் ஓப்பனிங்கில் வரலாம்.
கேப்டன் சிகந்தர் ரஸா தலைமையில் ஜிம்பாப்வே அணி
ஜிம்பாப்வே அணியில் கேப்டன் சிகந்தர் ரஸா தலைமையில் பிரையன் பெனெட், தடிவானஷே மருமானி (WK), ரயன் பர்ல், டியான் மையர்ஸ், டோனி முன்யோங்கா, தாஷிங்கா முசெகிவா, வெலிங்டன் மசகத்சா, பிராட் எவான்ஸ், ரிச்சர்ட் எங்கராவா, மற்றும் பிளெசிங் முசாரபானி ஆகியோர் விளையாட உள்ளனர்.
சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட்
சேப்பாக்கம் மைதானத்தின் Dry Surface பிட்ச் ஆனது ஸ்பின் மற்றும் பவுன்ஸ்க்கு நல்ல உதவும். மேலும் இது பேட்ஸ்மேன்களுக்கு நல்ல ஆதிக்கம் மற்றும் நட்பான பிட்ச் ஆகும்.
கிரிக்கெட் சங்கம் ரசிகர்ளுக்கு மெட்ரோ பயணங்களை ஸ்பான்சர் செய்கிறது
கிரிக்கெட் ரசிகர்களின் தடையற்ற போக்குவரத்தை மேம்படுத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கிரிக்கெட் போட்டிக்கான பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மெட்ரோ பயணங்களை ஸ்பான்சர் செய்கிறது. மேலும் மெட்ரோ ரயில் சேவை ஆனது நீட்டிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் இந்த கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை பயன்படுத்தி இந்த கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாளில் எந்த மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்தும் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு இடையிலான சுற்று பயணத்தினை (Ind vs Zim) மேற்கொள்ள முடியும். இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் டிஜிட்டல் நுழைவு பயணச்சீட்டுகளில் உள்ள தனித்துவமான QR குறியீடுகளை பயன்படுத்த வேண்டும். மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி நுழைவு இயந்திரத்தில் QR குறியீடுகளை ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த நுழைவுச்சீட்டை பயன்படுத்தி கிரிக்கெட் ரசிகர்கள் பிப்ரவரி 26, 2026 அன்று 2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல் (ஒரு சுற்றுப் பயணத்திற்கு) மேற்கொள்ளலாம்.