Gistak Media

Ind-w vs Nz-w : மகளிர் உலகக்கோப்பை.. 4வது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா..!

2025 மகளிர் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவை தொடர்ந்து 4வது அணியாக (Ind-w vs Nz-w) அரையிறுதிக்கு இந்திய அணி தகுதிப்பெற்றுள்ளது. 8 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியா மற்றும் இலங்கையில் செப்டம்பர் 30-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பரபரப்பாக நடந்து வரும் உலகக்கோப்பை தொடர் நாக் அவுட் போட்டிகளை எட்டியுள்ள நிலையில், லீக் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 3 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்ற நிலையில், கடைசி இடத்திற்கு இந்தியா, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. இந்தசூழலில் நவி மும்​பை​யில் நேற்று நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் இந்​தியா – நியூஸிலாந்து அணி​கள் பலப்பரீட்சை நடத்தின.

இந்தியா முதலில் பேட்டிங்

நவி மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி கேப்டன் சோஃபி டிவைன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ஜோடி அதிரடி தொடக்​கம் கொடுத்​தனர். அபாரமாக விளையாடிய ஸ்மிருதி மந்​தனா 95 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 10 பவுண்​டரி​களு​டன் 14வது சதத்தை விளாசினார். மறு​புறம் சீராக ரன்​கள் சேர்த்த பிர​திகா ராவல் 2 சிக்​ஸர்​கள், 13 பவுண்​டரி​களு​டன் 122 ரன்​கள் எடுத்த நிலை​யில் கெர் பந்​தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்​கிய கேப்​டன் ஹர்​மன்​பிரீத் கவுர், ரோஸ்​மேரி பந்​தில் 10 ரன்​களில் அவுட் ஆனார். இந்​திய அணி 49 ஓவர்​கள் முடிவில் 3 விக்​கெட்​ (Ind-w vs Nz-w) இழப்​புக்கு 340 ரன்​கள் எடுத்த நிலை​யில் மழை காரண​மாக ஆட்​டம் நிறுத்​தப்​பட்​டது. அப்​போது ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 55 பந்​துகளில் 76 ரன்​களும், ரிச்சா கோஷ் 4 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் களத்தில் இருந்​தனர். மழை நின்​ற பிறகு சுமார் 2 மணி நேரம் கழித்து ஆட்​டம் மீண்​டும் தொடங்​கப்​பட்​டடு, டக்​வொர்த் லீவிஸ் விதிப்​படி நியூஸிலாந்து அணிக்கு இலக்கு மாற்றி அமைக்​கப்​படு​வ​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டது.

Ind-w vs Nz-w - Gistakmedia

நியூஸிலாந்து அணிக்கு 325 ரன்​கள் இலக்கு (Ind-w vs Nz-w)

DLS முறைப்படி நியூஸிலாந்து அணிக்கு 44 ஓவர்​களில் 325 ரன்​கள் எடுக்க வேண்​டும் என இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டது. சுலபமான இலக்கை நோக்கி விளை​யாடிய நியூஸிலாந்து அணி 44 ஓவர்களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 271 ரன்​கள் எடுத்து 53 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. ஏற்கெனவே ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி (Ind-w vs Nz-w) பெற்றுள்ளன. நாளை ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் லீக் சுற்றில் விளையாடுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியுடன் இந்திய அணி அரையிறுதியில் விளையாடும்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top