Ind-W vs Pak-W : மகளிர் உலகக் கோப்பை.. பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி..!
நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் (Ind-W vs Pak-W) வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. 8 அணிகள் பங்கேற்றுள்ள 13வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30-ம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இலங்கை கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாத்திமா சனா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து இந்திய அணியில் தொடக்க வீரர்களாக பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்ட்ட ஸ்மிருதி மந்தனா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பிரதிகா 31 ரன்னிலும், கேப்டன் ஹர்மன்பிரீத் 19 ரன்னிலும், ஹர்லீன் 46 ரன்னிலும், ஜெமிமா 32 ரன்னிலும், ஸ்னே ராணா 20 ரன்னிலும், தீப்தி 25 ரன்னிலும், ஸ்ரீசரணி 1 ரன்னிலும் வெளியேற, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசிய டயானா பாய்ஜி 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
பாகிஸ்தான் அணிக்கு 248 ரன்கள் இலக்கு
முதலில் பந்து வீசிய பாகிஸ்தான் அணி, இந்திய அணியை 250 ரன்களுக்குள் கட்டுப்படுத்துவதுதான் எங்கள் திட்டம் என டாஸின் போது கேப்டன் பாத்திமா சனா தெரிவித்தார். அதன்படி அவர்களது முதல் இன்னிங்ஸ் செயல்பாடு சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் (Ind-W vs Pak-W) களமிறங்கிய பாகிஸ்தான் அணி 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில் ஸித்ரா அமீன் மற்றும் நட்டாலியா பர்வேஸ் ஜோடி பாகிஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்டனர். நட்டாலியா 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஸித்ரா அமீன் 106 பந்துகளில் 81 ரன்களுடன் வெளியேற, அடுத்து களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி அபார வெற்றி (Ind-W vs Pak-W)
இந்நிலையில் பாகிஸ்தான் அணி 43 ஓவர்களில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் (Ind-W vs Pak-W) பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுக்களை கைப்பற்றிய கிரந்தி கவுட், ‘பிளேயர் ஆப் தி மேட்ச்’ விருதை வென்றார். மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய, இரண்டு போட்டிகளில் இரண்டிலும் வெற்றி பெற்று தற்போது புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!