Ind-w Vs SA-w : மகளிர் உலகக் கோப்பை.. இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை..!
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள டாக்டர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 10வது லீக் ஆட்டத்தில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை (Ind-w Vs SA-w) நடத்துகின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், செப்டம்பர் 30-ம் தேதி முதல் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மகளிர் உலகக்கோப்பை தொடரில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் மோதி இரண்டு வெற்றிகளை பெற்றுள்ள இந்திய மகளிர் அணி, புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. முதல் 2 இடங்களில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் உள்ளன.
இந்தியா - தென்னாப்பிரிக்கா பலப்பரீட்சை
அதேசமயத்தில், தென்னாப்பிரிக்கா அணி புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. மேலும் மகளிர் உலக கோப்பை லீக் தொடரில் சிறப்பான ஆதிக்கத்தை செயல்படுத்தி வரும் இந்திய அணி, இன்றையப் ஆட்டத்திலும் தனது வெற்றிப் பயணத்தை தொடரவும், ஆதிக்கத்தை தக்கவைக்கவும் (Ind-w Vs SA-w) முயற்சிக்கும். இந்திய அணியின் பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பிரதிகா ராவால், ஹர்லீன் தியோல், ரிச்சா கோஷ் உள்ளிட்டோரும் இருப்பது அணிக்கு பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது. அதேசமயத்தில், பந்துவீச்சை பொறுத்தவரையில் சாரணி, ரேனுகா சிங், தீப்தி சர்மா, ஸ்நே ரானா மற்றும் கிரந்தி கவுட் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இந்திய மகளிர் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியா ஆதிக்கம் (Ind-w Vs SA-w)
அதேநேரத்தில், கேப்டன் லாரா வோல்வார்ட் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி, முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வியை சந்தித்தது. ஆனால் அந்த தோல்வியில் இருந்து மீண்ட தென்னாப்பிரிக்கா அணி, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அபார வெற்றிப் பெற்ற உத்வேகத்துடன் இந்திய அணியுடனான (Ind-w Vs SA-w) போட்டியை எதிர்கொள்கிறது. தென்னாப்பிரிக்கா அணியின் பேட்டிங்கில் தஸ்மின் பிரிட்ஸ் சுனே லஸ், அன்னேக் போஷ், லாரா வோல்வார்ட் உள்ளிட்டோரும், பந்துவீச்சில் மரிஸான் கேப், சோளே டிரையான், அயபோங்கா காக்கா, நோன்குலுலேகோ, அன்னேரி டெர்க்சன் ஆகியோர் இருப்பது அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை 33 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், இந்தியா 20 வெற்றிகளுடன் ஆதிக்கத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.
அணிகளின் விவரம்
இந்தியா: பிரதிகா ராவல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்மிர்தி மந்தனா, ஹர்லீன் தியோல், ரிச்சா கோஷ், தீப்தி ஷர்மா, சினே ராணா, ஸ்ரீ சரனி, கிரந்தி கவுட், ரேணுகா சிங் அல்லது அமன்ஜோத் கவுர்.
தென்ஆப்பிரிக்கா: லாரா வோல்வார்ட் (கேப்டன்), மரிஜானே காப், தஸ்மின் பிரிட்ஸ், சுனே லுஸ், அனேகே பாஷ், சினாலோ ஜாப்தா, நடினே கிளெர்க், குளோயி டிரையான், மசபதா கிளாஸ், அயபோங்கா காகா, நோங்குலுலேகா மிலாபா.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!