Gistak Media

India vs West Indies: Women’s T20 World Cup Highlights | IND W VS WI W

IND W VS WI W: மகளிருக்கான T20 உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. குரூப் லீக் சுற்றுப்போட்டிகளில் இந்திய அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது டாஸ் வென்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த அணியின் கேப்டன் ஹெலி மேத்யூஸ் 2 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனை டெய்லருடன் இணைந்த கேம்ப்பெல் பொறுப்புடன் ரன்களை சேர்த்தனர். டெய்லர் 42 ரன்களும், கேம்ப்பெல் 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த இரண்டு விக்கெட்டையும் இந்திய அணியின் தீப்தி சர்மா கைப்பற்றினார். இவர்களுக்கு அடுத்து வந்த செதான் நேஷன் 21 ரன்களும், ஷபிகா கஜ்னபி 15 ரங்களும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியானது களமிறங்கியது. அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஷபாலி வர்மா 28 ரன்களை எடுத்து அவுட் ஆனார். இவர்களை தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ஹெர்மன்ப்ரீத் கவுர் 33 ரன்களும், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 44 ரன்களும் எடுத்தனர். 18.1 வது ஓவரில் 4 விக்கெட்களை இழந்த இந்திய அணியானது 119 ரன்களில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய விக்கெட்களை கைப்பற்றிய தீப்தி சர்மா ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியானது இந்திய அணி குரூப் லீக் பாயின்ட்ஸ் டேபிளில் 2 வது இடத்திற்கு முன்னேரியது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top