India Agni 5 Missile Test Successful: இந்தியாவின் அக்னி 5 ஏவுகனை சோதனை வெற்றி
அணு ஆயுதங்களை ஏந்திக்கொண்டு 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்று தாக்கும் திறன் படைத்த அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக (India Agni 5 Missile Test Successful) நடத்தப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் சந்திப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து, இந்தியா இந்த மேம்பட்ட அக்னி 5 அணு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.
மேலும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (Defence Research and Development Organisation) உருவாக்கப்பட்ட இந்த அக்னி 5 ஏவுகனையானது மல்டிபிள் இன்டிபென்டலி டார்கெட்டபிள் ரீ-என்ட்ரி வெஹிக்கிள் (MIRV) தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த அக்னி 5 ஏவுகணை பல அணு ஆயுதங்களை வெவ்வேறு இலக்குகளில் சுமந்து செல்வதால் இந்தியாவின் அணுசக்தி விநியோக திறனில் இது ஒரு பெரிய வளர்ச்சியாகும்.
அக்னி 5 ஏவுகணை (India Agni 5 Missile Test Successful)
இந்த அக்னி 5 ஏவுகணை என்பது 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை (Ballistic Missile) ஆகும். மேலும் இது திட-எரிபொருள் உந்துவிசை அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த அக்னி 5 ஏவுகணை சுமார் 1.5 டன் எடை கொண்ட அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு இலக்கை துல்லியமாக தாக்கும் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அக்னி 5 ஏவுகணை சிறப்பம்சம்
சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்கும் இடைநிலை தூர (பாலிஸ்டிக் ஏவுகணை) ஏவுகணையாக இது உள்ளது. ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் வரை இந்த ஏவுகணை (India Agni 5 Missile Test Successful) பாயும் தன்மை கொண்டது. மேலும் நம் இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும், இராணுவ வலிமையையும் இந்த அக்னி 5 ஏவுகணை சோதனை வெளிப்படுத்தியுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் காலங்களில் இந்தியாவின் அக்னி ஏவுகணைகள் 8,000 கி.மீ தூரம் வரை தாக்கும் திறனில் வடிவமைக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
Latest Slideshows
-
TNPSC Group 2 & 2A Exam Postponed : டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் குளறுபடி.. தமிழகம் முழுவதும் தேர்வுகள் தள்ளிவைப்பு.!
-
India Beat USA T20 WC : டி20 உலககோப்பை.. அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றிகரமான தொடக்கம்..!
-
With Love Review : பழைய காதலைத் தேடும் பயணமா? 'வித் லவ்' திரை விமர்சனம்.!
-
India U19 Champions 2026 : யு19 உலகக்கோப்பை.. இங்கிலாந்தை வீழ்த்தி 6வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
India T20 World Cup Fixtures : டி20 உலகக் கோப்பை.. இந்திய அணி ஆடும் போட்டிகளின் முழு அட்டவணை விவரம்?
-
WPL 2026 Final : மகளிர் ஐபிஎல்.. டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி கோப்பை வென்றது ஆர்சிபி..!
-
Murugappa Group : 125 ஆண்டுகள் வரலாறு கொண்ட "முருகப்பா குழுமத்தின்" வெற்றிப் பயணம்.!
-
Postal Department Jobs 2026 : அஞ்சல் துறையில் 28,740 பணியிடங்கள்.. 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! உடனே விண்ணப்பிங்க.!
-
India U19 WC Final : U19 உலகக்கோப்பை.. ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி FINAL சென்றது இந்தியா.!
-
Hair Thin Fiber Chip : மனித முடியை விட மெல்லிய 'கணினி சிப்'.. சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.!