விசாகப்பட்டினத்தில் ஜனவரி 28, 2026 அன்று நடைபெற்ற T20 தொடரின் 4வது போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றாலும், இந்தியா 5வது போட்டியில் ஆதிக்கம் செலுத்தி நியூசிலாந்தை வென்றது. இதைத்தொடர்ந்து இந்த தொடரில் இந்தியா 4-1 என்ற விகிதத்தில் முன்னிலையில் உள்ளது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் தொடரை 4-1 என முடிவுக்கு கொண்டுவந்ததின் மூலம் T20 உலகக் (India Beats New Zealand T20 Series) கோப்பைக்கு இந்தியாவின் தயாரிப்பை உறுதிப்படுத்தி உள்ளார்.
T20 உலகக் கோப்பை தொடரின் சுருக்கம்
T20 உலகக் கோப்பை தொடரில் நாக்பூர், ராய்ப்பூர் மற்றும் கவுஹாத்தியில் நடைபெற்ற முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்று கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதைத்தொடர்ந்து விசாக்கப்பட்டினத்தில் நடைபெற்ற 4வது போட்டியில் இந்திய அணி ஆனது நியூசிலாந்து அணியிடம் தோல்வியுற்றது. அதையடுத்து திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 5வது போட்டியில் இந்திய அணி ஆனது நியூசிலாந்தை வென்று 4-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணியினரின் ஆல்-ரவுண்ட் திறன்களின் வெளிப்பாடு (India Beats New Zealand T20 Series)
இந்திய கிரிக்கெட் வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சு, மற்றும் பீல்டிங் என அனைத்து திறன்களிலும் சிறந்து விளங்குகின்றனர். இந்த தொடரில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மூன்று அரைசதங்களுடன் தொடரின் சிறந்த வீரராக (Player of the Series) தேர்ந்தெடுக்கப்பட்டார். இஷான் கிஷான், அபிசேக் சர்மா மற்றும் சிவம் துபே ஆகியோர் தங்களது அதிரடி ஆட்டத்தை காட்டியுள்ளனர். அர்ஷ்தீப் சிங் தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரில் அதிக விக்கெட்டுகள் (9) எடுத்த நாயகராக திகழ்கிறார். ஹர்திக் பாண்டியா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் இந்த தொடரில் மிடில் ஆர்டரில் ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்திய பவுலர்கள் இந்த இந்தியா-நியூசிலாந்து T20 தொடரில் (2026) மொத்தமாக 24 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். குறிப்பாக இந்திய கிரிக்கெட் வீரர்களின் வலுவான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு திறன் உலகத்திற்கு வெளிப்பட்டுள்ளது. இது இந்திய அணியின் ஒரு சில வீரர்களால் மட்டுமல்லாமல் அல்ல ஒவ்வொரு வீரரின் தனிப்பட்ட (முழு அணியால்) முழுமையான அர்பணிப்பால் பெற்ற வெற்றி ஆகும்.
இனி இந்தியாவை தோற்கடிப்பது எளிதல்ல
நியூசிலாந்துக்கு எதிரான இந்த T20 தொடரின் 4-1 என்ற இந்திய அணியின் வெற்றிக் கதையானது ஒரு தொடரை வென்ற கதையல்ல. இந்திய டி20 கிரிக்கெட்டின் புதிய யுகத்தின் தொடக்க கதையாகும். டி20 தொடரில் விளையாடிய ஒவ்வொரு இந்திய அணி வீரரின் ஈடுபாடு மற்றும் பங்களிப்பை (India Beats New Zealand T20 Series) வெளிப்படுத்தி உள்ளது. இளம் இந்திய வீரர்களின் தைரியம், தெளிவான திட்டமிடல், மற்றும் அச்சமில்லா அணுகுமுறையை உலகத்திற்கு உணர்த்தியுள்ளது. எதிர்கால வெற்றிகளுக்காக முழுமையாக தயாராக உள்ள இந்தியாவை தோற்கடிப்பது இனி எளிதல்ல என சர்வதேச அளவில் உள்ள கிரிக்கெட் அணியினர்களுக்கும் மற்றும் கிரிக்கெட் உலகத்திற்கும் அறிவித்துள்ளது.