Gistak Media

India Cricket Team New Sponsor : இந்திய அணியின் நியூ டைட்டில் ஸ்பான்சராக ’அப்பல்லோ டயர்ஸ்’ தேர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமையை ‘அப்பல்லோ டயர்ஸ்’ நிறுவனம் 2½ ஆண்டு கால ஒப்பந்தத்தில் 579 கோடி ரூபாய்க்கு (India Cricket Team New Sponsor) பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக பிரபல ஆன்லைன் விளையாட்டு செயலியான ட்ரீம் 11 (Dream 11) நிறுவனம் 2023-ம் ஆண்டு முதல் இருந்து வந்தது. மக்களவையில், அண்மையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட செயலிகள் தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்ததால், இந்திய அணியின் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து ட்ரீம் 11 நிறுவனம் விலகியது. இதனை தொடர்ந்து ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் சீருடையில் எந்த ஸ்பான்சர் பெயரும் இடம் பெறவில்லை. இந்நிலையில் ட்ரீம் 11 நிறுவனம் விலகியதால், இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஸ்பான்சரை தேடிய இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. இந்த அறிவிப்பில் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சராக விண்ணப்பிக்க செப்டம்பர் 16-ம் தேதி கடைசி நாளாக அறிவித்திருந்தது.

அப்பல்லோ டயர்ஸ் தேர்வு (India Cricket Team New Sponsor)

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர்ஷிப் உரிமம் கோரி அப்பல்லோ டயர்ஸ், கான்வா, ஜேகே சிமண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பித்து இருந்தன. இதில் கான்வா நிறுவனத்தின் 544 கோடி ரூபாய் மற்றும் ஜேகே சிமண்ட்ஸ் நிறுவனத்தின் 477 கோடி ரூபாய் ஏலத்தை முறியடித்து அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் 579 கோடிக்கு ஏலத்தை வென்று இந்திய அணியின் ஸ்பான்சர்ஷிப் உரிமையை பெற்றுள்ளது. மேலும் இது முந்தைய ட்ரீம் 11 நிறுவனத்தின் 1 போட்டிக்கு 4 கோடி ரூபாய் என இருந்த கட்டணத்தை விட, ஒரு போட்டிக்கு 4.7 கோடி ரூபாய் கட்டணம் வழங்குகிறது.

India Cricket Team New Sponsor - Gistakmedia

அரியானா மாநிலம் குருகிராமை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம், 2028-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை சுமார் 2½ ஆண்டு கால ஒப்பந்தத்தில், இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் ரூ.579 கோடிக்கு ஒப்பந்தம் (India Cricket Team New Sponsor) செய்துள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம் 21 ஐசிசி போட்டிகளுக்கும், 121 இருதரப்பு போட்டிகளுக்கும் ஸ்பான்சர் வழங்குகிறது. மேலும் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் அக்டோபர் மாதம் 2-ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியின்போது இந்திய வீரர்களின் சீருடையில் அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்தின் பெயரை பார்க்கலாம்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top