Gistak Media – Cinema News | Trending News | Latest News

India Economic Growth : 2025-26-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.3% ஆக இருக்கும் என ஐஎம்எஃப் கணிப்பு?

இந்தியா பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வேகமாக வளரும் ஒரு பெரிய பொருளாதார நாடு என்பதை IMF-ன் கணிப்பு (India Economic Growth) காட்டுகிறது.

உலகப் பொருளாதார கண்ணோட்டம்

சமீபத்திய IMF- ன் 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்பானது 7.3% ஆகும். இந்த IMF-ன் 7.3% கணிப்பானது உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியாவின் வலுவான செயல்திறனை எடுத்துக்காட்டுகிறது. சமீபத்திய வலுவான காலாண்டு தரவுகளின் அடிப்படையில் இந்த புதுப்பிப்பானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

IMF-ன் கணிப்பின் படி  உலகத்தில் ஒட்டுமொத்தமாக வளர்ந்து வரும் சந்தைகளின் வளர்ச்சி விகிதம் ஆனது  4% ஆகும். 

IMF-ன் கணிப்பின் படி,

  • 2026-ல் சீனாவின் வளர்ச்சி விகிதம் – 4.5%.
  • 2026-ல் அமெரிக்காவின் வளர்ச்சி விகிதம் – 2.4%.
  • 2026-ல் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் – 7.3%.
  • 2026-ல் உலக சராசரி வளர்ச்சி விகிதம் – 3.3%.

இந்திய உள்நாட்டில் ஏற்பட்ட சாதகமான சூழ்நிலைகள்

  • கணிப்புகளை விட அதிகமான அளவுகளில் தனியார் நுகர்வு மற்றும் முதலீட்டுகள் இருந்தன. நகர்ப்புற தேவைகள் நல்ல நிலையான தூண்டுதலை தந்தன.
  • உள்கட்டமைப்புக்கு தேவையான அரசாங்க மூலதனச் செலவு அதிகமாக இருந்தது. இது, உற்பத்தி மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளுக்கு நல்ல ஆதரவை அளித்தது. பொருளாதார வளர்ச்சிக்கு அரசு செலவு அதிகரிப்பு உதவுகிறது.
  • வலுவாக உள்ள இந்தியாவின் உள்நாட்டு தேவை பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • உள்நாட்டில் ஏற்பட்டுள்ள 7% விவசாய வளர்ச்சி மற்றும் 8-9% உற்பத்தி விரிவாக்கம் நல்ல ஊக்கத்தை தந்துள்ளன. மக்களின் வாங்கும் சக்தியை RBI-ன் இலக்கு வரம்பிற்குள் குறைந்த பணவீக்கம் ஆனது அதிகரித்தது.
India Economic Growth - Gistakmedia

சாதகமான உலகளாவிய வெளிப்புற காரணிகள்

  • அமெரிக்க கொள்கைகளால் ஏற்பட்ட குறைந்தபட்ச வர்த்தக இடையூறுகள்
  • பொருட்களின் நிலையான விலைகள் மற்றும் ஊதிய வளர்ச்சி. 
  • சிறந்த ஏற்றுமதி வளர்ச்சிக்கு உதவிய சேவைகள் மற்றும் மருந்துகள்.
  • சேவைகள் (IT, சுற்றுலா) மற்றும் தொழில்துறையின் வலுவான Q3 செயல்திறன், இது எந்தவொரு விவசாய மந்தநிலையையும் ஈடுகட்டும் விதத்தில் அமைந்தது.
  • UPI மற்றும் GST மூலம் ஏற்பட்ட டிஜிட்டல் பொருளாதார விரிவாக்கம் மற்றும் முறைப்படுத்தல் ஆனது சிறந்த செயல்திறனை மேம்படுத்தியது.
  • 60% க்கும் அதிகமான மொத்த உள்நாட்டு உற்பத்தி விரிவாக்கம்.
  • PLI திட்டங்கள் மின்னணு மற்றும் வாகன உற்பத்தியை அதிகரித்தன.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top