India GDP Growth Up 7.8 Percent June Quarter : முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.8 சதவீதமாக வளர்ச்சி
சேவைத் துறையின் வளர்ச்சியால், இந்தியாவின் ஜிடிபி (GDP) ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 7.8 சதவீதமாக (India GDP Growth Up 7.8 Percent June Quarter) வளர்ச்சியடைந்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வளர்ச்சியாகும். மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜனவரி – மார்ச் 2025 காலாண்டின் 7.4 சதவீத வளர்ச்சியையும், முதல் காலாண்டில் இருந்த 6.5 சதவீத வளர்ச்சியையும் விட இது அதிகமாகும். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சியானது, இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும், பெரிய பொருளாதாரம் என்ற தனது நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்திய, இரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் இராணுவ உபகரணங்கள் வாங்குவதைக் காரணம் காட்டி, இந்திய பொருட்களுக்கு, அமெரிக்கா 2 மடங்கு வரி விதித்துள்ள இந்த நேரத்தில் இந்தியாவின் வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரிசர்வ் வங்கி கணிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி (GDP) வளர்ச்சியானது 6.5 சதவீதமாக குறையும் என ஏற்கனவே கணித்திருந்தது. மேலும் பொருளாதார நிபுணர்களும் ஜனவரி – மார்ச் காலாண்டில் இருந்த 7.4 சதவீத வளர்ச்சியை விடக் குறைந்து, 7 சதவீதம் என்ற அளவில் இந்திய ஜிடிபி இருக்கும் என கணித்திருந்தனர். இந்நிலையில் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 7.8 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது.
சேவைத் துறையின் வளர்ச்சி அதிகரிப்பு
இந்த காலாண்டில் ஏற்பட்ட 7.8 சதவீத வளர்ச்சிக்கு, சேவைத் துறையின் வளர்ச்சி கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 9.3 சதவீதமாக உயர்ந்ததே முக்கிய காரணமாகும். ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து சேவைத் துறை தொடர்ந்து (India GDP Growth Up 7.8 Percent June Quarter) வளர்ச்சியடைந்து வருகிறது. முக்கிய சேவைத்துறையான தகவல்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு, போக்குவரத்து, வர்த்தகம், உணவகம் ஆகியவையின் மொத்த மதிப்புக்கூட்டப்பட்ட வளர்ச்சியானது, ஜனவரி – மார்ச் இருந்த 6 சதவீதத்தில் இருந்து 8.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் ரியல் எஸ்டேட் துறை 9.5 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது.
அனைத்துத் துறைகளும் வளர்ச்சி
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில், உற்பத்தி முதல் சேவைகள் வரை, அனைத்துத் துறைகளும் பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சியடைந்துள்ளன. இதில் விவசாயத் துறை 3.7 சதவீதமும், ஜவுளி மற்றும் உற்பத்தித் துறை 7.7சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. மேலும் அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் இந்த வளர்ச்சி தொடரும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!