India-Pakistan War Update : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம்
பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலா தளமான பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலால் 26-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் சிந்தித்து பாகிஸ்தான் (India-Pakistan War Update) பொதுமக்களுக்கும், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற 9 தீவிரவாத அமைப்புகளின் மீது குறிவைத்து ”ஆப்ரேஷன் சிந்தூர்” மூலம் கடந்த மே 7-ம் தேதி நள்ளிரவு 1 மணி அளவில் தாக்குதல் நடத்தியது.
அதிகரிக்கும் போர் பதற்றம் (India-Pakistan War Update)
இந்த ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று இரவு (மே 8) 10 மணி முதல் பாகிஸ்தான் ராணுவம் போர் ஒப்பந்தத்தை மீறி இந்தியாவின் 15 முக்கிய நகரங்களின் மீது 50-க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டது. இந்த ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம் ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய எஸ் 400 ஏவுகணை மூலம் நடுவானில் இடைமறித்து அனைத்து ட்ரோன்களையும் அழித்தது. இந்நிலையில் இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் (India-Pakistan War Update) அதிகரித்து வருகிறது.
தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியா ஒருபோதும் அமைதியாக இருந்ததில்லை. ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தும் போதும், இந்திய ராணுவம் பயங்கரவாத அமைப்புகளுக்கும், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் மறக்க முடியாத அளவில் தக்க பதிலடியை கொடுத்து வந்துள்ளது. மேலும் தற்போதுவரை பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு, எதிராக இந்திய ராணுவம் கொடுத்த பதிலடிகளின் விவரங்களை பார்க்கலாம்.
ஆப்ரேஷன் ஜிஞ்சர்
கடந்த 2011-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் குகல்தார் மலைத்தொடரில் அமைந்துள்ள தொலைதூர இந்திய இராணுவ நிலையின் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தியா ராணுவம் ‘ஆப்ரேஷன் ஜிஞ்சர்’ என்ற பெயரில் (India-Pakistan War Update) சர்ஜிக்கல் தாக்குதலை மேற்கொண்டது. இந்த சர்ஜிக்கல் தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த 13 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
ஊரி சர்ஜிக்கல் ஸ்டிரைக்
கடந்த 2016-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் ஊரி பகுதியில் அமைந்துள்ள இந்திய ராணுவ தலைமையகத்தின் மீது பாகிஸ்தானிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, அதே வருடம் செப்டம்பர் மாதம் இந்திய ராணுவம் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என்ற பெயரில் பெரிய (India-Pakistan War Update) தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 19 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாலக்கோடு வான்வழித் தாக்குதல்
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 40-க்கு மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு காரணமான பாலகோட்டில் உள்ள ‘ஜெய்ஷ்-இ-முகமது’ தீவிரவாத அமைப்பின் மீது இந்தியா ராணுவம் பிப்ரவரி 26-ம் தேதி இந்தியப் போர் விமானங்களால் (India-Pakistan War Update) வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!