India Post GDS Recruitment 2024 : 44,228 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 44,228 கிராம அஞ்சல் பணியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு (India Post GDS Recruitment 2024) அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 3,789 காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளன.
- மேலும் இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
India Post GDS Recruitment 2024 :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கிவரும் தமிழக தபால் அலுவலகங்களில் கிராமின் டக் சேவக் (GDS) என்ற தபால் அலுவலர் (BPM) மற்றும் உதவி தபால் அலுவலர் (ABPM/Dak Sevak) பணியிடங்களுக்கு 3,789 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வித் தகுதி (Educational Qualification) : இந்த கிராமின் டக் சேவக் என்ற தபால் அலுவலர் (BPM) மற்றும் உதவி தபால் அலுவலர் (ABPM/Dak Sevak) பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
- வயதுத் தகுதி (Age) : இந்த கிராமின் டக் சேவக் என்ற தபால் அலுவலர் (BPM) மற்றும் உதவி தபால் அலுவலர் (ABPM/Dak Sevak) பணியிடங்களுக்கு 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சம்பளம் (Salary) : இந்த தபால் அலுவலர் (BPM) பதவிக்கு தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.12,000 – 29,380/- வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த தபால் அலுவலர் மற்றும் உதவி தபால் அலுவலர் பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு பொது தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த தபால் அலுவலர் மற்றும் உதவி தபால் அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : இந்த இரண்டு பணியிடங்களுக்கும் (India Post GDS Recruitment 2024) 05.08.2024 அன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
- மேலும் விவரங்கள் அறிய : https://indiapostgdsonline.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!