Gistak Media

India Squad Announced For Asia Cup : ஆசிய கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

2025-ம் ஆண்டு ஆசிய கோப்பை டி20 தொடரானது துபாய் மற்றும் அபுதாபியில் வரும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 28-ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் ப்ளேயிங் லெவனை கேப்டன் சூர்யகுமார் (India Squad Announced For Asia Cup) தலைமையில் பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.

ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்

துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை டி20 தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் பாகிஸ்தான் ஆகிய 4 அணிகளும், குரூப் பி பிரிவில் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் என மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியானது செப்டம்பர் 14-ம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தான் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஆசிய கோப்பைக்காக 15 பேர் கொண்ட இந்திய அணியை (India Squad Announced For Asia Cup) தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். மேலும் இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

India Squad Announced For Asia Cup - Gistakmedia

இந்திய அணி வீரர்கள் விவரம் (India Squad Announced For Asia Cup)

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ஜஸ்ப்ரீத் பும்ரா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, ஜிதேஷ் சர்மா, திலக் வர்மா, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங் மற்றும் வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜுரல், ஜெய்ஸ்வால், பிரசித் கிருஷ்ணா ஆகிய 4 பேரும் ரிசர்வ் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து பேசிய தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆசிய தொடருக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பைக்கான இறுதி தேர்வாக இது இருக்காது என தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top