India Squad Announcement For Wi Tests : வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி அக்டோபர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட (India Squad Announcement For Wi Tests) உள்ளது. இதன் முதல் ஆட்டம் அகமதாபாத்தில் வரும் அக்டோபர் 2 முதல் 6-ம் தேதி வரை தொடங்குகிறது. 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அக்டோபர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது. இதனை இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் துபாயில் நேற்று அறிவித்தார்.
கருண் நாயர் நீக்கம்
இதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார். பும்ராவுக்கு தேவையான அளவு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (India Squad Announcement For Wi Tests) விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் ஜொலிக்காத கருண் நாயர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் 8 இன்னிங்ஸில் விளையாடி 205 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். மேலும் இந்த சுற்றுப்பயணத்தில் ஒரு முறை கூட களமிறங்க வாய்ப்பு கிடைக்காத மேற்கு வங்க வீரர் அபிமன்யு ஈஸ்வரனும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ரவீந்திர ஜடேஜா துணை கேப்டன்
மேலும் கருண் நாயருக்கு பதிலாக 25 வயதான இடது கை பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சாய் சுதர்சன் 6 இன்னிங்ஸில் 140 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையிலும் அவருக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பேட்ஸ்மேனும் துணை கேப்டனுமான ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக பாதியில் விலகியிருந்த ஆல்ரவுண்டர் நித்திஷ் குமார் ரெட்டி காயத்தில் இருந்து குணமடைந்த நிலையில், மீண்டும் அணியில் திரும்பி உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு தென் ஆப்பிரிக்க அணி நவம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
அணி விவரம் (India Squad Announcement For Wi Tests)
ஷுப்மன் கில் (கேப்டன்), ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல், நாராயண் ஜெகதீசன், ஜஸ்பிரித் பும்ரா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!