Gistak Media

India Squad For Australia: ஆஸ்திரேலியா ஒருநாள், டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த நிலையில் நேற்று அக்டோபர் 4-ம் தேதி மும்பையில் கூடிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) மூத்த ஆடவர் தேர்வுக் குழு, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய (India Squad For Australia) அணியை அறிவித்துள்ளது. இந்திய ஒருநாள் அணிக்கு ரோஹித் சர்மாவிற்கு பதிலாக இளம் வீரர் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் கேப்டனாகப் பொறுப்பேற்று  சிறப்பாக வழி நடத்தி வரும் நிலையில், அவருக்கு ஒருநாள் அணியையும் வழிநடத்தும் மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம், இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தொடர்கிறார்.

இந்திய ஒருநாள் அணி

கேப்டன் சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் அணியில், இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அணியில் இடம்பிடித்துள்ளதால் இந்திய அணிக்கு களத்தில் பெரும் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விக்கெட் கீப்பர்களாக கே.எல்.ராகுல் மற்றும் துருவ் ஜுரல் ஆகிய இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் சமீபத்திய தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களாக இந்திய அணியை (India Squad For Australia) பலப்படுத்துகின்றனர். அதேபோல் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கவனம் ஈர்த்த ஹர்ஷித் ராணாவுக்கும் ஒருநாள் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஒருநாள் அணி வீரர்கள் விவரம்

சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜுரல்.

India Squad For Australia - Gistakmedia

இந்திய டி20 அணி வீரர்கள் விவரம் (India Squad For Australia)

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, அபிஷேக் சர்மா, சுப்மன் கில் (துணை கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர்.

ஒருநாள் தொடர் அட்டவணை

முதல் ஒருநாள் போட்டி: அக்டோபர் 19, பெர்த், 

2வது ஒருநாள் போட்டி: அக்டோபர் 23, அடிலெய்டு,

 3வது ஒருநாள் போட்டி: அக்டோபர் 25, சிட்னி.

டி20 தொடர் அட்டவணை

முதல் டி20 போட்டி: அக்டோபர் 29, கான்பெரா,

2வது டி20 போட்டி: அக்டோபர் 31, மெல்போர்ன்,

3வது டி20 போட்டி: நவம்பர் 2, ஹோபார்ட்,

4வது டி20 போட்டி: நவம்பர் 6, பில் பிப்பன் ஓவல், கோல்டு கோஸ்ட்,

5வது டி20 போட்டி: நவம்பர் 8, பிரிஸ்பேன்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top