இந்தியா மற்றும் இலங்கை இணைந்து டி20 உலகக் கோப்பையை பிப்ரவரி 7, 2026 முதல் மார்ச் 8, 2026 வரை நடத்த (India T20 World Cup Fixtures) உள்ளன. மொத்தம் 20 அணிகள் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 55 போட்டிகள் நடைபெற இருக்கிறது.
4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ள 20 அணிகள்
- குழு A-வில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
- குழு B-யில் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
- குழு C-யில் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ், இத்தாலி, நேபாளம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
- குழு D-யில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
போட்டிகள் நடைபெறும் இடங்கள்
- இந்தியாவில் உள்ள மும்பை, டெல்லி, அகமதாபாத், சென்னை, கொல்கத்தா.
- இலங்கையில் உள்ள கொழும்பு, மற்றும் கண்டி.
ஆட்ட விவரங்கள்
- குழுச் சுற்று ஆட்டம் – பிப்ரவரி 7-20 வரை (40 போட்டிகள்).
- சூப்பர் ஆட்டம் – பிப்ரவரி 8 – 21 வரை (12 போட்டிகள்).
- அரையிறுதி ஆட்டம் – மார்ச் 4 – 5 வரை (கொல்கத்தா/கொழும்பு, மும்பை).
- இறுதி ஆட்டம் – மார்ச் (அகமதாபாத் அல்லது கொழும்பு).
ICC இணையதளத்தில் முழு போட்டிகளின் விரிவான பட்டியல் கிடைக்கும்.
இந்திய அணி பங்கு பெறும் போட்டிகளின் அட்டவணை (India T20 World Cup Fixtures)
- இந்தியா vs அமெரிக்கா – பிப்ரவரி 7 (சனிக்கிழமை) – மும்பை (வான்கடே) – இரவு 7:00 மணி
- இந்தியா vs நமீபியா- பிப்ரவரி 12 (வியாழக்கிழமை) – டெல்லி – இரவு 7:00 மணி
- இந்தியா vs பாகிஸ்தான் – பிப்ரவரி 15 (ஞாயிற்றுக்கிழமை) – கொழும்பு – இரவு 7:00 மணி
- இந்தியா vs நெதர்லாந்து – பிப்ரவரி 18 (புதன்கிழமை) – அகமதாபாத் – இரவு 7:00 மணி.
மேலும், இந்திய அணி ஆனது சூப்பர் 8 சுற்றுக்கு தேர்வு பெற்றால், அகமதாபாத், சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் போட்டி நடைபெறும்.
டி20 உலகக் கோப்பை - சாத்தியமான இந்திய வீரர்களின் பட்டியல்
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும், அக்சர் படேல் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வீரர்களின் பட்டியல்
- அபிஷேக் சர்மா
- சஞ்சு சாம்சன்
- திலக் வர்மா
- ரிங்கு சிங்
- இஷான் கிஷன்
- அக்சர் படேல்
- ஹர்திக் பாண்டியா
- ஷிவம் துபே
- ஜஸ்பிரித் பும்ரா
- வருண் சக்கரவர்த்தி
- ஹர்ஷித் ராணா
- அர்ஷ்தீப் சிங்
- குல்தீப் யாதவ்
- வாஷிங்டன் சுந்தர்