India To Become Worlds 2nd Economy By 2038 : இந்தியா 2038-ம் ஆண்டுக்குள் உலகின் 2-வது பெரிய பொருளாதார நாடாக மாறும்
இந்தியா வரும் 2038-ம் ஆண்டுக்குள் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி உலகின் 2-வது பெரிய பொருளாதாரநாடாக உருவெடுக்கும் என எர்ன்ஸ்ட் அன்ட் யங் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் (India To Become Worlds 2nd Economy By 2038) தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஆலோசனை நிறுவனமான எர்ன்ஸ்ட் அன்ட் யங் August மாதம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியாவின் தற்போதைய வலுவான பொருளாதார கட்டமைப்பு மற்றும் சாதகமான மக்கள் தொகை மற்றும் தொடர்ச்சியான தொழில் துறை சீர்திருத்தங்கள் ஆகியவை இந்தியாவின் நீண்டகால வளர்ச்சியை ஊக்குவிப்பதாக இருப்பதாகவும், அதிலும் குறிப்பாக, அதிக இளைஞர்கள் சக்தி (சராசரி வயது 28.8) மற்றும் பொதுமக்களின் முதலீட்டு விகிதம், சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் மற்றும் அதிக சேமிப்பு, தொலைநோக்குச் சீர்திருத்தங்கள், அரசின் கடன் மற்றும் GDP இடைவெளி குறைந்து வருவது, கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு இந்தியாவின் சீரான பொருளாதார வளர்ச்சி ஆகியவை இந்தியாவுக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
GDP 34.2 டிரில்லியன் டாலராக உயரும் (India To Become Worlds 2nd Economy By 2038)
இந்தியா தற்போது 4.19 ட்ரில்லியன் அமெரிக்கா டாலர் (வாங்கும் சக்தி அடிப்படையில் PPP) GDP-யுடன் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. மேலும் இது 2030-ல் 20.7 ட்ரில்லியன் டாலரை எட்டி உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்து இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியானது சராசரியாக ஆண்டுக்கு 6.5 சதவீதமாகவும், அதே சமயத்தில் அமெரிக்காவின் GDP வளர்ச்சி 2.1 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) கணித்துள்ளது. மேலும் இதே நிலை 2030-ம் ஆண்டுக்கு பிறகும் தொடர்ந்தால், அமெரிக்காவின் பொருளாதாரத்தை வரும் 2038-ம் ஆண்டுக்குள் பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் GDP வளர்ச்சி 34.2 ட்ரில்லியன் டாலரை எட்டி உலகின் 2-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!