Gistak Media – Cinema News | Trending News | Latest News

India U19 Beat Pakistan : யு19 உலகக் கோப்பை.. பாகிஸ்தானை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா.!

புலவாயோவில் நடந்த சூப்பர் சிக்ஸ் போட்டியில் இந்திய U19 அணி ஆனது பாகிஸ்தானை 111 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதிக்கு (India U19 Beat Pakistan) முன்னேறி உள்ளது.

அரை இறுதிக்கு முன்னேறிய இந்திய அணி

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஆனது பந்துவீச்சை முதலில் தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த  இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்தது. வேதாந்த் திரிவேதி சிறப்பாக விளையாடி 98 பந்துகளில் 68 ரன்களை குவித்தார். அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி ஆனது 33.3 ஓவர்களில்194 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தானின் உஸ்மான் கான் 66 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் கனிஷ்க் சௌஹான் மற்றும் தீபேஷ் தேவேந்திரன் ஆகியோர் தங்களது சிறந்த பந்துவீச்சின் காரணமாக தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த போட்டியில் இந்திய ஸ்பின்னர்கள் அபார மாயாஜாலம் காட்டினர். இந்த வெற்றியின் காரணமாக இந்திய அணி அரை இறுதியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளது.

ஆயுஷ் மகாத்ரே தலைமையிலான இந்திய அணியினர்

  • ஆயுஷ் மகாத்ரே (கேப்டன்)
  • ஆர்.எஸ். அம்ப்ரிஷ்
  • கநிஷ்க் சௌஹான்
  • டி. தீபேஷ், மொஹமட் ஏனான்
  • ஆரான் ஜார்ஜ்
  • அபிக்யான் குண்டு
  • கிஷன் குமார் சிங்
  • விஹான் மல்ஹோத்ரா
  • உதவ் மோஹன்
  • ஹெனில் படேல்
  • கிலான் ஏ. படேல்
  • ஹர்வன்ஷ் சிங்
  • வைபவ் சூர்யவன்ஷி
  • வேடன்ட் திரிவேதி
India U19 Beat Pakistan - Gistakmedia

“நாம் யாரையும் வீழ்த்த முடியும்”- என செயல்படும் இந்திய U19 அணி (India U19 Beat Pakistan)

இந்திய U19 அணி ஆனது “நாம் யாரையும் வீழ்த்த முடியும்”- என மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த யு19 அணியினர் இந்திய கிரிக்கெட்டின் இளம் சிங்கங்களாக (India U19 Beat Pakistan) உலகுக்கு தென்படுகின்றனர். இந்த யு19 அணியின் வெற்றிக்குப் பின்னால் தென்படும் சிறப்புகள்,

  • அமைதியான ஆனால் தெளிவான கேப்டனின் தலைமையே முதன்மை காரணம். கேப்டன் எடுத்த முக்கிய முடிவுகள் அற்புதம்.
  • பவர்ப்ளே ஓவர்களில் சரியான பவுலர் தேர்வு செய்தது.
  • ஸ்பின்னர் பவுலர்களை சரியான நேரத்தில் இறக்கியது.
  • ஃபீல்டிங் செட்-அப்பில் தொடர்ச்சியான மாற்றங்களை செய்தது.
  • பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் பலவீனங்களைப் சரியாக புரிந்து செயல்பட்டது.
  • “விக்கெட் வீழ்த்த முடியாவிட்டாலும், ரன் எடுக்காமல் தடுக்க வேண்டும்” என்ற செயல்பாடு.

மொத்தத்தில் இந்த இந்திய U19 அணியின் “முடிவெடுக்கும் திறன்” மற்றும்
 “அழுத்தத்தில் அமைதி” மிகவும் பாராட்டை பெற்றது. இந்த இந்திய U19 அணியின் தனிப்பட்ட திறமையை விட அணித் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. இந்திய அணியின் அடுத்த போட்டி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறும்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top