Gistak Media

India Vs Australia 2nd ODI 2023: மோசமான சாதனை படைத்த இந்தியா

இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

ஆஸ்திரேலியா பந்து வீச்சில் சுருண்ட இந்திய அணி:

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2- வது ஒருநாள் போட்டி (India Vs Australia 2nd ODI) ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜ சேகர் ரெட்டி மைதானத்தில் நேற்றைய முன்தினம் (மார்ச் -19) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியானது பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதனையடுத்து முதலில் களமிறங்கிய சுப்மன் கில், ரோகித்ஷர்மா ஜோடி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி தொடக்கத்தை அளித்தது. சுப்மன் கில் ஒரு ஷார்ட் ஆடி பாயிண்டில் நின்ற பில்டரிடம் கேட்ச் ஆகி டக்அவுட் முறையில் வெளியேறினார். இதனை தொடர்ந்து கேப்டன் ரோகித்ஷர்மா, வெளியே சென்ற பந்தை டிரைவ் செய்ய, அது சிலிப்பில் நின்ற பில்டரிடம் கேட்சாக பிடிபட்டது. இதனால் ரோகித் 13 ரன்களில் வெளியேறினார்.

அதன் பிறகு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ஸ்டார்க் பந்து வீச்சில் விக்கெட்டை பறி கொடுத்தார். இதனால் 32 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி விளையாடிய நிலையில் ராகுல், கோலி ஜோடி அணியை காப்பாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கே.எல். ராகுலும் 5 ரன்களுடன் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். அதன்பிறகு ஹார்திக் பாண்டியா மீது ரசிகர்கள் கவனம் திரும்பியது. ஆனால் அவர் வெறும் 3 பந்துகளை கூட தாக்குப்பிடிக்க முடியாமல் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.பிறகு களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 26 ஓவர்களில் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல்ஸ்டார்க் 5 விக்கெட்களையும், சீன்அபார்ட் 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியானது களமிறங்க உள்ளது.

India Vs Australia 2nd ODI-ல் மோசமான சாதனை படைத்த இந்தியா

இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய வீரர்கள் 4 பேர் டக்அவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் (India Vs Australia 2nd ODI ) போட்டியானது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ்க் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணியானது 26 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதில் சுப்மன்கில், சூர்யாகுமார் யாதவ், முகமது சமி, சிராஜ் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இதன் மூலமாக ஒரு அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் 4 பேர் டக்அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர். இதற்கு முன்னதாக பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக 4 பேர் டக் அவுட்டில் வெளியேறியுள்ளனர்.    

1995 – இந்தியா – பாகிஸ்தான் – ஷார்ஜா

1997 – இந்தியா – பாகிஸ்தான் – ஹைதராபாத்

2009 – இந்தியா – ஆஸ்திரேலியா – கௌஹாத்தி

2011 – இந்தியா – தென் ஆப்ரிக்கா – நாக்பூர்

2017 – இந்தியா – இலங்கை – தர்மசாலா

2023 – இந்தியா – ஆஸ்திரேலியா – விசாகப்பட்டினம் (India Vs Australia 2nd ODI 2023)

இதன் மூலமாக 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீரர்களில் 4 பேர் டக்அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.

இந்தியாவில் இந்தியா எடுத்த குறைந்த பட்ச ரன்கள்:

இந்தியா-இலங்கை – 78 ரன்கள் – 1986

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் – 135 ரன்கள் – 1987

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் – 100 ரன்கள் – 1993

இந்தியா-இலங்கை – 112 ரன்கள் – 2017

இந்தியா-ஆஸ்திரேலியா – 117 ரன்கள் – 2023 (India Vs Australia 2nd ODI 2023)

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top